பொது

இந்தியாவின் No.1 ரோலர் கோஸ்டருடன் வரவிருக்கும் TN Wonderla!

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே, இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு நிறுவனமான வொண்டர்லா (Wonderla) அமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன.

உலகெங்கிலும் மக்களின் முக்கிய பொழுதுபோக்குத் தேர்வுகளில் ஒன்றாகத் திகழும் தீம் பார்க் கலாச்சாரம், தற்போது இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கோடை மற்றும் விடுமுறை நாட்களில், குடும்பத்துடன் குழந்தைகளும், பெரியவர்களும் பொழுதுபோக்கு பூங்காக்களுக்குப் படையெடுப்பது வாடிக்கை.

இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு நிறுவனமாக வொண்டர்லா திகழ்கிறது. ஏற்கெனவே ஹைதராபாத், கொச்சி, பெங்களூரு மற்றும் புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் பூங்காக்களை வெற்றிகரமாக இயக்கி வருகிறது. தமிழ்நாட்டில் இந்த நிறுவன பூங்கா இல்லாவிட்டாலும், கொச்சி, பெங்களூருக்குச் செல்லும் தமிழர்களின் எண்ணிக்கை அதிகம்.

வொண்டர்லா நிறுவனம் தமிழ்நாட்டில் தனது முதல் பொழுதுபோக்கு பூங்காவை, சென்னையிலிருந்து சுமார் 47 கிலோமீட்டர் தொலைவில் இந்த பிரம்மாண்ட பூங்கா அமைந்துள்ளது, செங்கல்பட்டு மாவட்டம், பழைய மகாபலிபுரம் சாலையில், திருப்போரூர் அடுத்த இள்ளளூரில் இது பிரம்மாண்டமாக அமைத்துள்ளது. 65 ஏக்கரில், சுமார் ₹510 கோடி செலவில் இது கட்டப்பட்டுள்ளது.

இந்த பூங்காவின் மிக முக்கியமான சிறப்பு அம்சம், உலகப் புகழ்பெற்ற Bolliger & Mabillard நிறுவனத்தின் தொழில்நுட்பத்தில் அமைய உள்ள ரோலர் கோஸ்டர் ஆகும்.

இது இந்தியாவிலேயே மிகப்பெரிய ரோலர் கோஸ்டராக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன், நியூயார்க் போன்ற நகரங்களில் உள்ளதைப் போன்ற பிரம்மாண்டத்தை இது சென்னைக்கும் கொண்டு வருகிறது.

இந்தப் பூங்காவில் மொத்தம் 52 சவாரிகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீர் சவாரிகள்: 16, குழந்தைகளுக்கான பிரத்தியேக சவாரிகள்: 10, அதுபோக

முக்கிய சவாரிகளான மிஷன் இன்டர்செல்லர், ரோலர் கோஸ்டர், வை-ஸ்கீம், வொண்டர்லா பம்ப், பைரேட் ஷிப் போன்றவை அடங்கும்.

நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்காவின் திறப்பு விழா தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி (02-12-2025) பொதுமக்கள் பயன்ப்பாட்டிற்காக திறக்கப்படவுள்ளது. இதன் நுழைவுக்கட்டணம் குறித்த
குறித்த தகவல்களும் விரைவில் வெளியாகும்.

Related Posts