பொது

குறைந்து வரும் வேலைவாய்ப்பின்மை.. முன்னேற்ற பாதையில் பெண்கள்!

இளம் பெண்களுக்கான வேலைவாய்ப்பின்மை விகிதம், கடந்த 5 மாதங்களில் குறைந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் Periodic Labour Force Survey (PLFS) நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

கிரமம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில், இளம் ஆண்கள் மற்றும் பெண்களின் வேலை, அவர்களுக்கு இருக்கும் வேலைவாய்ப்பு குறித்து மத்திய புள்ளியில் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. வேலை வாய்ப்பு விகிதம், மொத்த மக்கள் தொகையில் வேலைக்கு செல்வோரின் விகிதம் ஆகியவை இந்த அறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு காலாண்டுக்கும் வெளியிடப்படும் அறிக்கையில், இந்த காலாண்டில் எந்த முறையும் இல்லாத அளவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 19லிருந்து 18 ஆக குறைந்து இருக்கிறது.

15-29 வயதிலான நகர்ப்புற ஆண்களை ஒப்பிடும் போது, அதே வயதை சேர்ந்த நகர்ப்புற பெண்களுக்கு வேலைவாய்ப்பின்மை 10 சதவீதம் அதிகமா இருக்கிறது. நகர்ப்புற ஆண்களுக்கு 15.6 ஆக இருக்கும் வேலைவாய்ப்பின்மை நகர்ப்புற பெண்களுக்கு 25.7 ஆக இருக்கிறது.

கிராமப்புறங்களிலும் வேலைவாய்ப்பின்மை விகிதம் இதே நிலையில் இருக்கின்றது. கிராமப்புற ஆண்களுக்கு வேலைவாய்ப்பின்மை 12.6 சதவீதமாக இருக்கும் நிலையில், பெண்களுக்கு அது 14.3 சதவீதமாக இருக்கிறது.

கிராமப்புறமாக இருந்தாலும் நகர்புறமாக இருந்தாலும், ஆண்களை ஒப்பிடும்போது பெண்களுக்கு வேலைவாய்ப்பின்மை அதிகமாக இருக்கிறது. ஆனால் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, இந்த ஆண்டு பெண்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது.

வேலைவாய்ப்பின்மையில் ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையே இடைவேளை, நகர்ப்புற பகுதிகளில் கிராமப்புறங்களை விட அதிகமாக இருக்கிறது. இது கிரமபுறங்களில் வேலைவாய்ப்பில் இருக்கும் ஆண் பெண் பாகுபாடு, நகர்புறத்தைவிட கிராமப்புறங்களில் குறைவாக இருப்பதை காட்டுகிறது.

Related Posts