தொழில்

இந்திய வம்சாவளி இளைஞர்களின் புதிய சாதனை! பின்னுக்கு தள்ளப்பட்ட மார்க் ஜூக்கர்பெர்க்!

ஸ்டார்ட்அப் மூலம் இளம் வயதிலேயே கோடீஸ்வரர்களான பட்டியலில், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கின் சாதனையை முறியடித்து, இந்திய வம்சாவளி இளைஞர்கள் உள்பட அமெரிக்காவைச் சேர்ந்த 3 இளைஞர்கள் சாதனை படைத்துள்ளனர். இவர்கள் மூன்றுபேருக்கும் 22 வயதே ஆகிறது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சூர்யா மிதா, ஆதர்ஷ் ஹைரேமத் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பிரென்டன் பூடி ஆகிய மூன்று பேரும் இணைந்து மெர்கோர் என்ற AI நிறுவனத்தை தொடங்கியுள்ளனர்.

போர்ப்ஸ் அறிக்கையின்படி, சான் பிரான்சிஸ்கோவைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனத்தின் மதிப்பு 10 பில்லியன் டாலர்களாக இருக்கிறது. இதனால், நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிரென்டன் பூடி, தலைமை தொழில்நுட்ப அதிகாரி ஆதர்ஷ் ஹைரேமத் மற்றும் குழுத் தலைவர் சூர்யா மிதா ஆகியோர் இளம் வயதில் சுயதொழில் மூலம் கோடீஸ்வரர்களானவர்கள் என்ற சாதனையை படைத்துள்ளனர்.

கடந்த 2008ம் ஆண்டு 23 வயதில் இளம் வயதில் சுய தொழில் மூலம் கோடீஸ்வரர் ஆனவர்களில் பட்டியலில் முதன் முதலில் மார்க் ஜூக்கர்பெர்க் இடம்பிடித்தார். தற்போது, அவரை இந்த மூன்று நண்பர்களும் பின்னுக்கு தள்ளியுள்ளனர்.

Related Posts