பொது

பூமிக்கு ஒரு எல்லை! கடைசி நகரம் எது தெரியுமா? உலகிலேயே விசித்திரமான இடம் இதுதான்..

உலகத்தில் பல நகரங்கள் இயற்கை அழகையும், தனித்துவமான பண்பாடுகளையும் கொண்டுள்ளன. அவற்றில் சில நகரங்கள் முக்கிய துறைமுகங்களாகவும் செயல்படுகின்றன. அத்தகைய ஒரு நகரமாகும் உஷுவாயா. தென் அமெரிக்காவில் உள்ள அர்ஜெண்டினாவின் தெற்குப் பகுதியில், டியெரா டெல் ஃபியூகோ மாகாணத்தில் அமைந்துள்ளது. இது ஒரு முக்கிய துறைமுக நகரமாகவும், சுற்றுலா பயணிகளைக் கவரும் இடமாகவும் உள்ளது.
இந்த நகரம் ஆண்டுதோறும் பல ஆயிரக்கணக்கான கப்பல்களை வரவேற்கிறது. பெரும்பாலான கப்பல்கள் அண்டார்டிக்காவிற்குச் செல்லும் பயணத்திற்கான துவக்கப் புள்ளியாக உஷுவாயாவை தேர்வுசெய்கின்றன. இந்நகரம், கடல் மற்றும் மலைகளால் சூழப்பட்டிருப்பதனால், அது ஒரு கண்கவர் இயற்கை சூழலை கொண்டுள்ளது.
பூமி
பூமியைப் பற்றி நாம் சிந்திக்கும்போது, பல வியப்பூட்டும் கேள்விகள் எழுகின்றன. பூமிக்கு ஒரு முடிவு உண்டா? கடைசி நகரம் எது? என கேள்விகள் எழுகின்றன. இந்த கேள்விக்குப் பதிலாக, “உலகின் கடைசி நகரம்” என அழைக்கப்படும் இடம் உஷுவாயா தான்.
அண்டார்டிக்கா என்பது மனித வாழ்விற்கு ஏற்றதல்லாத சூழலோடு காணப்படும் பகுதி. அங்கு மிகக் குறைந்த அளவிலேயே மக்கள் வசிக்கின்றனர். ஆய்வுகள் மேற்கொள்வதற்காக மட்டுமே சில விஞ்ஞானிகள் அங்கு இருக்கின்றனர்.
பூமி
இந்த வகையில், அண்டார்டிக்காவிற்கு மிக அருகில் அமைந்துள்ள உஷுவாயா நகரம், இயல்பாகவே உலகின் கடைசி நகரமாகக் கருதப்படுகிறது. இதன் மக்கள் தொகை சுமார் 83,000 ஆகும். இந்நகரம் கடலையும், மலைகளையும் இணைக்கும் ஒரு விசித்திர இடமாக விளங்குகிறது.
இதனால் தான், உஷுவாயா “உலகின் கடைசி நகரம்” என அழைக்கப்படுகிறது.

Related Posts