பொது

“ஜாதி ஒழிப்பு வெறும் வார்த்தையாகவே இருக்கிறது…” – பா.ரஞ்சித்!

சமீபத்தில் கேரளாவின் கோழிக்கோடில் நடந்த கேரளா இலக்கிய திருவிழாவில் (Kerala Literature Festival (KLF)) இயக்குநர் பா.ரஞ்சித் பேசிய கருத்துகள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. “Caste, Camera, Ambedkar” என்ற தலைப்பின் கீழ் பா.ரஞ்சித் உரையாடினார்.

அப்போது அரசியலில் நிலவும் ஜாதி பாகுபாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “அனைத்து கட்சிகளிலும் ஜாதி அரசியல் மிக வலுவாக இருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கக்கூடிய மாவட்ட செயலாளர்கள் அந்த பகுதியோட பெரும்பான்மை ஜாதியை சேர்ந்தவராகத்தான் இருப்பாரு. 41 தனி தொகுதிகள் தவிர வேறு எந்த பொது தொகுதியிலும் பட்டியலின மக்கள் போட்டியிடும் சூழல் இல்லை. கம்யூனிஸ்ட், நாம் தமிழர் கட்சி போன்ற கட்சிகள் விதிவிலக்காக இருக்கின்றன. அரசியலில் ஜாதியை தவிர்த்துவிட்டால் அவர்களுடைய பவர் போய்விடும் என்ற அச்சம் அவர்களிடம் இருக்கிறது. அது திமுகவோ,அதிமுகவோ எந்த கட்சியாக இருந்தாலும் சரி. இப்படியொரு சூழல் இருக்கும்போது ஜாதிஒழிப்பு என்பது வெறும் வார்த்தையாகவே இருக்கிறது” என்றார். அவருடைய இந்த பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Posts