பொது

10 வினாடிக்கு ரூ.16 லட்சமா? ஆசிய கோப்பை விளம்பரங்களில் கோடிகளை அள்ளப்போகும் Sony

சமீபத்தில் ஆசிய கோப்பை 2025 போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் முன்னணி வீரர்கள் ஓய்வு பெற்றதால், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த தொடரில் இந்தியா தனது பரம எதிரியான பாகிஸ்தானுடன் வரும் செப்டம்பர் 14ஆம் தேதி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேருக்கு நேர் மோதவுள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றாலே ஸ்டேடியத்தில் இருக்கும் ரசிகர்களிடம் பெரும் ஆரவாரம் இருக்கும். அதுமட்டுமின்றி தொலைக்காட்சி, ஓடிடி போன்ற தளங்களில் கோடிக்கணக்கான பார்வையாளர்கள் பார்ப்பது வழக்கம். அந்த வகையில், இந்த போட்டி களத்தில் மட்டுமல்லாமல், விளம்பர வருவாயிலும் புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

10

2031 ஆம் ஆண்டு வரை ஆசிய கோப்பை போட்டிகளுக்கான ஊடக உரிமை Sony Pictures Networks India நிறுவனத்திடம் உள்ளது. இந்த நிலையில், ஆசிய கோப்பை 2025 போட்டிக்கான அதிகாரப்பூர்வ விளம்பர விலையை Sony வெளியிட்டுள்ளது. இந்த போட்டி நடக்கும் சமயத்தில் 10 விநாடிகள் கொண்ட தொலைக்காட்சி விளம்பரத்திற்கான விலை ரூ.16 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொலைக்காட்சியில் Co-presenting Sponsorship ரூ.18 கோடியாகவும், Associate Sponsorship ரூ.13 கோடியாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியா அல்லாத பிற போட்டிகளை உள்ளடக்கிய Spot-Buy Packages ரூ.4.48 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டலில்:

Sony LIV என்ற டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் தளத்தில், இணை Co-Presenting Partner மற்றும் சிறப்பம்சங்கள் என மொத்தம் ரூ.30 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முக்கியமான போட்டிகளுக்கான டிஜிட்டல் விளம்பர Slot கூடுதல் விலைக்கு வழங்கப்படுகின்றன.

இந்திய போட்டிகளுக்கு முன் வரும் 10 விநாடி விளம்பரங்கள் ₹500 per 1,000 impressions. இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு முன் வரும் விளம்பரங்களுக்கு ₹750. போட்டி நடக்கும் இடைவேளையில் வரும் விளம்பரங்களுக்கு (Mid-roll) ₹600. இது மிகவும் குறைவாக உள்ளது என நீங்கள் நினைத்தால். அது தான் இல்லை… உதரமாக 10 விநாடி 500 என்றால் 1 மில்லியன் Views போனால் 5 லட்சம் செலுத்த வேண்டும். நாம் பார்க்கும் ஒரு ஒரு விளம்பரங்களுக்கும் நிறுவனங்கள் கோடிக்கணக்கில் கோட்டி கொடுக்கின்றனர். இதன் மூலம் சோனி நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய் லாபம் கிடைக்கும் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

Related Posts