தொழில்நுட்பம்

தனிப்பட்ட தகவல்களை திருடும் Social Media? Facebook முதலிடம்

நாம் இன்ஸ்டாகிராமிலோ, ஃபேஸ்புக்கிலோ எதையாவது தேடும் பொழுது, பிற ஆப்களிலும் அதை சார்ந்த விளம்பரங்கள் வருவதை பார்த்திருப்போம். இந்த நிறுவனங்கள் நமது தகவல்களை பரிமாறிக் கொள்கின்றன என்பது நமக்கு தெரியும். ஆனால், இவை நமக்கு தெரியாமல் கூடுதலாக தனிப்பட்ட தகவல்களை சேகரிக்கிறதா?…. ஆம். இதில், எந்த ஆப்புகள் அதிகளவிலான தனிப்பட்ட தகவல்களை சேகரிக்கின்றன என்ற கேள்வி நம்மை ஆச்சரியப்படுத்தும்.

“இரும்புத்திரை” படத்தில் வில்லனாக நடித்த அர்ஜுன் “Information is power” என்ற வசனத்தை பயன்படுத்தி இருப்பர். அவருக்கு கிடைக்கும் தகவல்களை வைத்து, பிறரின் தனிப்பட்ட தகவல்களை திருடி, அதனால் என்ன விளைவுகளை உருவாக்க முடியும் என்பதை படம் வழியாக நமக்கு எடுத்துரைக்கின்றனர். ஆனால், இன்னும் பலர் இதனை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.

சமீபத்தில் Apteco (ஆப்டெகோ) நிறுவனம் நடத்திய ஆய்வில், அதிகளவில் தனிப்பட்ட தகவல்களை சேகரிக்கும் மொபைல் ஆப்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் நாம் அதிகம் பயன்படுத்தும் பல ஆப்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, சமூக வலைத்தள ஆப்கள் நம்மை மிகத் தீவிரமாக கண்காணிக்கின்றன. மெட்டா, யாண்டெக்ஸ் போன்ற நிறுவனங்கள் ரகசியமாக தகவல்களை சேகரிக்கின்றன எனக் குற்றச்சாட்டுகள் அவ்வபொழுது வருகின்றன.

டாப் 10 ஆப்கள்:

Apteco நிறுவனம் வெளியிட்ட, அதிகமான தனிப்பட்ட தகவல்களை சேகரிக்கும் டாப் 10 ஆப்களின் பட்டியலில் மெட்டாவின் Facebook, Instagram மற்றும் Threads ஆகியவை முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. இவை நமது பெயர்கள், தொலைபேசி எண்கள், வீட்டு முகவரிகள் போன்ற தகவல்களை அதிக அளவில் சேகரிக்கின்றன.

social-media-facebook-instagram-threadsஇதைத் தொடர்ந்து Linkedin, Pintrest, Amazon Alexa, Amazon, Youtube, X (முன்னதாக டிவிட்டர்) மற்றும் Paypal ஆகியவை பட்டியலில் இடம்பிடித்துள்ளன. இந்த ஆப்கள் தகவல்களை சேகரிப்பதோடு மட்டுமல்லாமல், அவற்றை மற்ற நிறுவனங்களுக்கு விற்பதாகவும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

எந்த தகவல்களை சேகரிக்கின்றன?

இந்த ஆப்கள் வீட்டு முகவரி, User Id, Search History, பண பரிவர்த்தனை விவரங்கள் உள்ளிட்ட ஏராளமான தனிப்பட்ட தகவல்களை பதிவுசெய்கின்றன. இந்தத் தகவல்களை பயன்படுத்தி தங்களது வருமானத்தை அதிகரிக்கின்றன. மேலும், நமது தேடல்களின் அடிப்படையில் நம்மை தொடர்ந்து கண்காணித்து, அதற்கேற்ப விளம்பரங்களை நமக்கு காட்டுகின்றன.

செய்ய வேண்டியவை:

social-media-facebook-instagram-threads

இதைக் கேட்டவுடன் உடனடியாக அந்த ஆப்களை Delete செய்ய வேண்டிய இல்லை. இவை நாம் தினமும் பயன்படுத்தும் முக்கியமான ஆப்கள் என்பதால், சில மாற்றங்களை செய்ய ஆப்டெகோ நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. ஒரு ஆப்பை பதிவிறக்கம் செய்யும் போது, அது கேட்டும் அனைத்து அனுமதிகளுக்கும் நாம் கண்ணைமுடிக்கொண்டு ‘ஆம்’ கொடுத்து விடுவோம். சற்றே சிந்தித்து பாருங்கள் — ஒரு டெலிவரி ஆப்க்கு புகைப்பட அனுமதி எதற்காக தேவை?

 

நாம் ஒரு ஆப்பைப் பயன்படுத்தும் போது மட்டும் location (Setting >> app permission >> Location) அனுமதியை கொடுப்பது நல்லது; இது நமது location தகவல்களை தொடர்ந்து ட்ராக் செய்ய முடியாதவாறு தடுக்கும். தேவையான போதில் மட்டுமே Contacts மற்றும் புகைப்படங்களைப் பயன்படுத்த அனுமதி அளிக்கவும். மேலும், செயலி (App) செட்டிங்ஸ்களையும், போன் செட்டிங்ஸ்களையும் அவ்வப்போது சரிபார்த்து, தேவையான அனுமதிகளையே மட்டும் வழங்க வேண்டும்.

Related Posts