பொது

குற்ற வழக்கு தொடர்வு துறை இணை இயக்குநராக R. சேகர் துரை பொறுப்பேற்பு

குற்ற வழக்கு தொடர்வு துறை இணை இயக்குநராக வழக்கறிஞர் R. சேகர் துரை நேற்று பொறுப்பேற்றார்.

BNSS 2023 சட்டம் நடைமுறைக்கு வந்தபின் கடந்த மூன்று மாதங்களாக காலியாக இருந்த தமிழக குற்ற வழக்கு தொடர்வு துறை இணை இயக்குநர் பதவிக்கு வழக்கறிஞர் R. சேகர் துரையை தமிழக அரசு நியமித்தது. அவர் நேற்று பதவியேற்றார்.

1996 ஆம் ஆண்டு அரசு உதவி வழக்கறிஞராக தனது பணியைத் தொடங்கிய சேகர் துரை, தமிழ்நாடு குற்றவழக்கு தொடர்வுத் துறையில் பல்வேறு முக்கிய பதவிகளில் பல ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றியுள்ளார்.

இவரது நியமனம் மூலம் நீதிமன்றங்களில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்தவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் சிறப்பு கவனம் செலுத்தவும், குற்றவாளிகளுக்கு எதிரான தண்டனை சதவிகிதத்தை உயர்த்தவும், தமிழ்நாடு முழுவதும் உள்ள குற்றவியல் அரசு வழக்கறிஞர்களின் பணித்திறனை மேம்படுத்தவும் உதவும் என அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நேற்று அமைச்சர் எஸ்.ரகுபதியை சந்தித்து, இணை இயக்குநரை நியமித்ததற்கும், 40 புதிய உதவி அரசு வழக்கறிஞர் பதவிகளை உருவாக்கியதற்கும் நன்றி தெரிவித்தனர்.

Related Posts