பொது

ஒரே ஒருவருக்கே! “குவாடா நெகட்டிவ்”

உங்களுக்கு சராசரியாக எத்தனை ரத்த வகைகள் பற்றி தெரியும்? A, O, B, AB…? பெரும்பாலும் நமக்கு தெரிந்தது இந்த நான்கு ரத்த வகைகள் தான். அதிலும் Positive மற்றும் Negative என பிரிக்கப்படும். ஆனால் உண்மையில் நமது ரத்தத்தில் 600-க்கும் மேற்பட்ட ஆன்டிஜென்கள் (Antigens) இருக்கிறது. இந்த ஆன்டிஜென்களின் தனித்துவமான கலவைகள், புதிய ரத்த வகையை உருவாக்க முடியும். அப்படிப்பட்ட அரிதான ஒரு ரத்த வகைதான் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது – இதற்கு பெயர் “குவாடா நெகட்டிவ்”.

சர்வதேச ரத்தமாற்று அமைப்பு (ISBT) இதுவரை 47 தனித்துவமான இரத்த வகைகளை மட்டுமே அங்கீகரித்துள்ளது. தற்போது, அந்த பட்டியலில் 48வது புதிய ரத்த வகையான இந்த “குவாடா நெகட்டிவ்” சேர்க்கப்பட்டுள்ளது.

French scientists have discovered "Gwada negative," the world’s rarest blood type

இந்த கண்டுபிடிப்பு எப்படி நடந்தது?

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு, பிரான்ஸின் கரீபியன் தீவான குவாடலூப்பைச் சேர்ந்த 54 வயதான ஒரு பெண், அறுவை சிகிச்சைக்கு முன் மேற்கொண்ட வழக்கமான ரத்த பரிசோதனையின் போது, அவரது ரத்தத்தில் எதோ மாற்றம் தெரிந்தது. அவர் ரத்தத்தில் கண்டுபிடிக்கப்பட்டது, மனிதர்களிடம் இதுவரை யாரிடமும் காணப்படாத புதிய ரத்த வகை. இது விஞ்ஞானிகளை ஆச்சரியத்தை எற்படுத்த, அதனை பரிசோதிக்க தொடங்கினர். இது உலகில் மிகவும் அரிதான ரத்த வகை. இன்று வரை, அந்தப் பெண் ஒருவர் தான் இந்த இரத்த வகையுடைய ஒரே நபர். தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வுகளில், அந்த பெண்ணுக்கு முன்பு நடந்த சிகிச்சைகாக தனது தாய் மற்றும் தந்தை இருவரிடமிருந்தும் ரத்த மாற்றம் செய்த பொழுது மரபணுக்கள் மாற்றம் நடந்து, இந்த புதிய வகை ரத்தம் அவருக்கு வந்துள்ளது. ஒவ்வொரு ரத்த வகைக்கும் ஒவ்வொரு குணாதிசயம் உள்ளது, இந்த வகை ரத்தத்தின் குணாதிசயம் பற்றிய மருத்துவர்கள் ஆராய்ச்சி நடத்தி வருகின்றனர்.

French scientists have discovered "Gwada negative," the world’s rarest blood type

“குவாடா நெகட்டிவ்” பெயர் காரணம்?
அந்த பெண் பிறந்தது கரீபியன் தீவிலுள்ள குவாடலூப் நகரில். அந்த இடம் பிரான்சு மக்களிடையே “குவாடா (Gwada)” எனச் சுருக்கமாக அழைக்கப்படும். அந்த இடத்தின் நினைவாகவே இந்த புதிய இரத்த வகைக்கு “குவாடா நெகட்டிவ்” என்ற பெயர் வைக்கப்பட்டது. இந்த வகை ரத்தம், மிக முக்கியமான மரபணு ஆய்வுகள் மற்றும் மருத்துவ ஆராய்ச்சிகளுக்குப் பெரிதும் உதவும் என மருத்துவர் தெரிவித்துள்ளார்.

Related Posts