பொது

2034 FIFA: 1,150 அடி உயரத்தில் அமையும் சவுதியின் ‘நியோம் ஸ்கை ஸ்டேடியம்’

2034 ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பையை சவுதி அரேபியா நடத்த உள்ளது. இதுவும் நியோம் நகரத்தில், உலகின் முதல் ‘ஸ்கை ஸ்டேடியம்’ வரவிருக்கிறது. இதற்கு ‘நியோம் ஸ்டேடியம்’ என்றே பெயரிடப்பட்டுள்ளது.

நியோம் நகரின் ஒரு பகுதியான ‘தி லைன்’ என்ற பிரம்மாண்டக் கட்டிட அமைப்பில் ஒருங்கிணைக்கப்படும் இந்த ஸ்டேடியம், பூமிக்கு மேலே சுமார் 1,150 அடி (350 மீட்டர்) உயரத்தில் அமையவுள்ளது.

இதில் ஒரே நேரத்தில் சுமார் 46,000 பார்வையாளர்கள் போட்டிகளைக் கண்டுகளிக்க முடியும். இது மிகவும் நவீன மற்றும் உயர் தொழில்நுட்ப வடிவமைப்புடன் உருவாக்கப்பட உள்ளது. மேலும், இந்த ஸ்டேடியம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் கட்டுமானப் பணிகள் 2027-ஆம் ஆண்டில் தொடங்கி, 2032-ஆம் ஆண்டில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2034 உலகக் கோப்பைக்காக சவுதி அரேபியா திட்டமிடும் மொத்தம் 15 மைதானங்களில், இந்த நியோம் ஸ்கை ஸ்டேடியம் தான் முக்கிய இடமாக அமைகிறது.

Related Posts