பொது

சச்சின் போட்ட பதிவு.. துள்ளி குதிக்கும் ’3BHK’ படக்குழு!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக இருந்த சச்சின் டெண்டுல்கர் போட்ட பதிவால் ’3BHK’ திரைப்படக் குழு சந்தோஷத்தில் துள்ளி குதித்துக்கொண்டு இருகின்றது.

சச்சின் டெண்டுல்கர்ரிடம் அவரது ரசிகர் ஒருவர் “நீங்கள் அடிக்கடி படங்கள் பார்ப்பீர்களா? உங்க ஃபேவரைட் படம் என்ன?” என்று சமூகவலைதளத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு சச்சின், “நேரம் கிடைக்கும் போதெல்லாம் படம் பார்ப்பேன். சமீபத்தில் ’3BHK’ மற்றும் ’ஆட்டா தம்பாய்ச் நாய்’ ஆகிய படங்களை கண்டுரசித்தேன்” என்று பதிலளித்துள்ளார்.

இந்தப் பதிலால் ’3BHK’ படக்குழுவினர் பெரும் உற்சாகத்தில் இருக்கின்றனர். படத்தின் இயக்குநர் ஸ்ரீகணேஷ் வெளியிட்டிருக்கும் பதிவில், “ரொம்ப நன்றி சச்சின் சார். நீங்க என் குழந்தைப்பருவத்தின் ஹீரோ. எங்கள் படத்திற்கு இது மிகப்பெரிய விஷயம்” என்று தெரிவித்துள்ளார்.

ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயானி, மீதா ரகுநாத், சைத்ரா அச்சர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ’3BHK’. அம்ரித் ராம்நாத் இசையமைப்பில் உருவான இப்படத்தினை அருண் விஸ்வா தயாரித்திருந்தார். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

’ஆட்டா தம்பாய்ச் நாய்’ என்ற மராத்தி திரைப்படத்தின் இயக்குநரும் சச்சினின் பதிவை பகிர்ந்து, “கிரிக்கட் கடவுளிடமிருந்து இப்படியொரு வார்த்தை.. என்னால் தாங்க முடியாத அளவிற்கு மகிழ்ச்சியை உணர்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Related Posts