பொது

2026 உலக கோப்பைதான் எனது கடைசி போட்டி – ஓய்வை அறிவித்த ரொனால்டோ!

கால்பந்து நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது ஓய்வு குறித்துப் பேசியது தற்போது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 40 வயதைக் கடந்துவிட்ட ரொனால்டோ, இதுவரை 950-க்கும் மேற்பட்ட கோல்களை அடித்து, சர்வதேச கால்பந்து அரங்கில் அதிக கோல் அடித்த வீரராகத் திகழ்கிறார். குறிப்பாக 141 கோல்களை போர்ச்சுகல் அணிக்காக அடித்துள்ளார்.

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக கால்பந்து விளையாட்டில் ரசிகர்களின் நாயகனாக இருந்துவரும் இவர், அடுத்த வருடம் வரவிருக்கும் உலகக் கால்பந்து போட்டியே தன்னுடைய கடைசிப் போட்டியாக இருக்கும் என்று ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இன்னும் ஒரிரு ஆண்டுகள் மட்டுமே விளையாடப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், ரொனால்டோவுக்கு அடுத்த வருடம் 41 வயது ஆவதால், அதன் பிறகு உடல் நலத்திலும், குடும்பத்தினருடனும் நேரம் செலவிட விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts