தொழில்

ரூ.20-க்கு புதிய பானத்தை அறிமுகம் செய்த ரிலையன்ஸ்

தமிழ்நாட்டில், உடனடியாக பருகும் வகையிலான (ready-to-drink) “Joyland” என்ற புதிய பால் பானத்தை ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஸ்ட்ராபெரி, வெண்ணிலா என இரண்டு சுவைகளில் அறிமுகமாகியுள்ள இந்த பானத்தின் விலை ரூ.20 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் FMGC பிரிவான ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் (RCPL) இந்த பானத்தை அறிமுகம் செய்துள்ளது.

“Ready-to-drink பால் பானங்கள் சந்தையில் நாங்கள் நுழைவது, RCPL தயாரிப்புப் பிரிவை விரிவுபடுத்துவதிலும், நுகர்வோருக்கு அதிக தேர்வுகளை வழங்குவதிலும் ஒரு முக்கியமான படியாக உள்ளது. ‘ஜாய்லேண்ட்’ (Joyland) பிராண்டின் மூலம், உலகத் தரம் வாய்ந்த தயாரிப்புகளை அதிகமான குடும்பங்களுக்குக் கொண்டு சேர்க்கிறோம். இந்தப் பயணத்தைத் தமிழ்நாட்டில் தொடங்குகிறோம். ஜாய்லேண்ட் பிராண்டின் கீழ் பால் சார்ந்த பானங்களின் தயாரிப்புப் பிரிவை விரிவுபடுத்தி, படிப்படியாக இந்தியா முழுவதும் அதன் சந்தை வரம்பை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம்,” என்று ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் டி. கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும், இப்போது இரண்டு சுவைகளில் இந்த பானம், மேலும் பல சுவைகளில் கூடியவிரைவில் சந்தையில் கிடைக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதன்முறையாக ஜாய்லேண்ட் பால் பானங்களை அறிமுகப்படுத்தியுள்ள ரிலையன்ஸ் நிறுவனம், விரைவில் நாடு முழுவதும் அவற்றின் விற்பனையை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

Related Posts