பொது

என்னதான் சேலஞ்சாக இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா டா!

நம்மில் பலருக்கு ஸ்னாக்ஸ் என்றால் நினைவுக்கு வருவது பானி பூரிதான். ஸ்கூல் அல்லது காலேஜ் முடித்துவிட்டு நண்பர்களுடன் பானி பூரி சாப்பிடுவது பலரின் வழக்கம். இதனால் பல இடங்களில் பானி பூரி சேலஞ்ச் டிரெண்டாக தொடங்கியது.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு வீடியோ டிரெண்டாகி வருகிறது. அது என்னனா, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸைச் சேர்ந்த கரண் தஞ்சு, தனது நண்பருடன் ஒரு சேலஞ்ச் பண்ணி இருக்காரு.

அந்த சேலஞ்சில், கரணின் நண்பர் சாப்பிடும் ஒவ்வொரு பானி பூரிக்கும் ரூ.50 தருவதாக சொல்லி இருக்காரு. இதனை வீடியோ எடுத்து பதிவு செய்ய அவர்கள் பக்கத்தில் இருந்த பானி பூரி கடைக்குச் போயுள்ளனர்.

சேலஞ்ச் தொடங்கியதும், இரண்டு பானி பூரிகளை ஒரு தட்டில் வைத்து, தஞ்சுவின் நண்பர் அவற்றை ஒன்னு ஒன்னாக சாப்பிடுவதை வீடியோவாக பதிவு செய்ய தொடங்கினர். ஆனால், இந்த வீடியோ எடுக்கும் போழுது எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்தது.

பானி பூரி மசாலா வாளியில் ஒரு எலி விழுந்து நீந்திட்டு இருந்தது. அதனை கடை உரிமையாளர் கரண்டியால் தேடும்போது, அந்த எலி வாளியில் இருந்து குதித்து வெளியே ஓடியது. இது அனைத்தும் அவர்கள் எடுத்த வீடியோவில் பதிவாகி இருக்கு. இதில் ஆச்சரியம் என்னவென்றால், இதை பார்த்தும் கரணின் நண்பர் அந்த சேலஞ்சை நிறுத்தாமல் பானி பூரி சாப்பிட்டு கொண்டிருந்தார்.

மசாலா வாளியில் எலி விழுந்ததை தெரிந்தும் போட்டியில் வெற்றி பெற ஒரே நேரத்தில் 31 பானி பூரிகளை சாப்பிட்ட அவரை, “பானி பூரி இவ்வளவு சுவையாக இருப்பதற்கு அந்த எலியும் ஒரு காரணம்” என்று தற்போது நெட்டிசன்கள் பயங்கரமாக கலாய்த்து வராங்க.

Related Posts