பொது

இவ்ளோ அழகா? ஊதா நிறத்தில் மின்னும் Princess Crab

தாய்லாந்தின் Kaeng Krachan தேசிய உயிரியல் பூங்காவில் உள்ள நீர்வீழ்ச்சியில் ஒரு அரிய வகை நண்டு கண்டறியபட்டுள்ளது. முழுக்க ஊதா நிறத்திலும், வெள்ளை-ஊதா கலந்த 2 நிரங்களில் ஜொலிக்கும் இந்த அரிய வகை நண்டு இணைத்தில் வைரலாகி வருகிறது.

இதற்கு தாய்லாந்து இளவரசி Maha Chakri Sirindhorn-ன் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதனால் இதை “Sirindhorn Crab”, “Princess Crab” மற்றும் “King Crab” என பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. அதாவது, இது எங்கு வாழ்கிறதோ அங்கு தண்ணீரும் சூழலும் தூய்மையாக இருக்கிறது என்கின்றனர் அந்த பகுதி மக்கள். இதன் மேல் உள்ள ஊதா நிரத்திற்கான காரணம் குறித்து ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதாக பூங்கா அதிகரிகள் தெரிவித்துள்ளனர்.

1986-இல் Ngao நீர்வீழ்ச்சி தேசிய பூங்காவில் முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டதாக சில பதிவுகள் கூறுகின்றன. இருந்தாலும் தற்பொழுது உலகம் முழுவதும் பார்வைகள் இதை நோக்கி திரும்பியிருக்கிறது. இயற்கை ஆர்வலர்கள் இதை “இயற்க்கையின் விலைமதிப்பற்ற பரிசு” என்று அழைக்கிறார்கள். இணையத்தில் இதன் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

 

Crab Crab

Related Posts