பொது

ஜனநாயகனுக்கு தொடரும் சிக்கல்… . மீண்டும் முதலில் இருந்தா…!

ஜனநாயகன் திரைப்படம் தொடர்பான சட்டரீதியான சிக்கல்களை தொடர்ந்து சந்தித்து வரும் நடிகர் விஜய்க்கு அடுத்த சிக்கல் வந்து இருக்கு. தற்போது, சினிமா ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தும் விதமாக, ஜனநாயகன் திரைப்படத்தின் சென்சார் தொடர்பான வழக்கை மறுபடியும் முதலில் இருந்து ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜனவரி 7ஆம் தேதி, இந்த திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்க வேண்டும் என்று தனிநீதிபதி ஆஷா உத்தரவிட்ட நிலையில், அதனை எதிர்த்து, உடனே சென்சார் போர்டு மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டை மீண்டும் இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சென்சார் போர்டின் வாதங்களை ஏற்று, முன்னர் வழங்கப்பட்ட உத்தரவை ரத்து செய்துள்ளது.

நீதிமன்றம் கூறிய முக்கிய விஷயம் ஒன்னுதான், படத்தில் சில உணர்ச்சிப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வசனங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டது. குறிப்பாக, வெளிநாட்டவர்கள் இந்தியாவில் மதம் சார்ந்த பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடிய வகையில் பல வசனங்கள் உள்ளதாக சென்சார் தரப்பு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, படம் மறு ஆய்வு குழுவிற்கு அனுப்பப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில், படக்குழு தரப்பில், “படத்தை பார்த்துவிட்டு ஒரு வாரம் கழித்து ஆட்சேபணை தெரிவிப்பது நியாயமானதா? இந்த தாமதம் தயாரிப்பு நிறுவனத்தின் எதிர்காலத்தையே பாதிக்கிறது” என்று வேதனையுடன் தெரிவித்தனர். மேலும், அமேசான் ஓடிடி தளத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் படி படம் வெளியிடப்படவில்லை என்றால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த நிறுவனம் எச்சரித்துள்ளதாகவும், இதனால் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என தெரிவித்து இருக்கங்க.

தற்போது, இந்த வழக்கு மறுபடியும் தனிநீதிபதி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதால், புதிய உத்தரவு வரும் வரை ஜனநாயகன் திரைப்படம் ரிலீஸ் ஆகாது. மேலும், ரிலீஸ் தேதி கூடுதல் தள்ளிப்போகும் நிலை உருவாகியுள்ளது. விஜயின் கடைசி திரைப்படமாக கருதப்படும் இப்படி இழுத்தடிப்பது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts