பள்ளி நாட்களை யாராலும் மறக்க முடியாது. டீக்கடையில் நின்று பள்ளி நண்பனுடன் அந்த காலத்தில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை நினைத்து பேசும் பழக்கம் பலருக்கு உண்டு. அப்படிப் பட்ட பள்ளி பருவம் நாம் எல்லோருக்கும் ரொம்ப ஸ்பெஷல்…
நமது நண்பர்களுடன் ஓரே பென்சி கிடைத்து விட்டல் நம்மை கையிலே பிடிக்க முடியாது. ஆனால், தேர்வுகளில் வரும் மதிப்பெண், பள்ளி மாணவர்களை “முதல் பெஞ்ச் – படிப்பாளிகள்” மற்றும் “கடைசி பெஞ்ச் – படிப்பில் பின்தங்கியவர்கள்” என பிரிக்கும் நடைமுறை இன்னும் பல பள்ளிகளில் உண்டு. இந்தப் பழக்கத்தை மாற்ற நினைத்த இயக்குநர் வினேஷ் விஸ்வநாத், கையில் எடுத்த ஆயுதம் சினிமா…!
2024 நவம்பர் 22ஆம் தேதி மலையாளத்தில் வெளியான “ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன்” என்ற திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. வினேஷ் விஸ்வநாத் இயக்கிய இப்படம், ஒரு கிராமப்புற அரசு பள்ளியில் நடைபெறும் பள்ளித் தேர்தலை மையமாகக் கொண்டு இந்த கதை தொடங்கிறது. பள்ளித் தேர்தல் என்றாலே போட்டி, ஒத்துழைப்பு, சண்டை, மகிழ்ச்சி போன்ற பல எமோஷ்னல் இப்படத்திலும் நம்மை அந்த பருவத்திற்கே கொண்டு சேர்க்கும். ஆனால் இதில் ஒரு முக்கிய கேள்வி எழுகிறது: “ஏன் ஒரு மாணவன் கடைசி பெஞ்சில்தான் இருக்க வேண்டும்?” இந்தக் கேள்வி, பள்ளிகளில் உள்ள பாகுபாட்டையும், மாணவர்களுக்கு ஏற்படும் மனநிலை வேறுபாடுகளையும் கட்டுகிறது. கடைசி பெஞ்சில் இருக்கும் மாணவனிடம், முதல் பெஞ்சில் இருக்கும் மாணவர்கள் பேசவோ, பழகவோ கூட யோசிப்பார்கள். பேச ஆரம்பித்தாலும், ஆசிரியர் ஏதாவது சொல்லி விடுவார். இதற்கான தீர்வாக — இந்த படத்தில் பள்ளி வகுப்பறைகள் அரைவட்ட வடிவத்தில் அமைக்கப்படும். ஆசிரியர் நடுவில் இருக்க, மாணவர்கள் அவரை சுற்றி வட்டமாக அமர்கிறார்கள். இதனால், யாரும் “கடைசி பெஞ்ச்” கிடையது.
இது கேரளா பள்ளிகளில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் 6 பள்ளிகளில் இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதலாவதாக இந்த மாற்றத்தை கொண்டுவந்தது, கொல்லம் மாவட்டத்தில் உள்ள வலக்கம் ஆர்.வி.வி. மேல்நிலைப்பள்ளி. இது, கேரள போக்குவரத்து துறை அமைச்சர் கணேஷ்குமாரின் பள்ளி.
இயக்குநர் வினேஷ் விஸ்வநாத் கூறும்போது, “இந்த திரைப்படத்தின் மூலம் இந்தியாவில் முக்கிய மாற்றம் ஏற்படும் என நம்பினேன். படம் வெளியாவது முன்பே, அதாவது 7 மாதங்களுக்கு முன்பே கணேஷ்குமாருக்கு படத்தை காட்டினோம். அவர் பல மலையாளப் படங்களில் நடித்துள்ளார். இப்படம் அவருக்கு மிகவும் பிடித்தது. அதன்பின் தான் இந்த ஐடியா நடைமுறைக்கு வந்தது. முதலில் அவரது பள்ளியில் தான் இது நடைமுறைக்கு வந்தது என்பதை நண்பர் மூலம் தெரித்துக்கொண்டேன்” என்கிறார்.
இன்று, கேரளாவில் 6 பள்ளிகளில் அரைவட்ட அமர்வு முறை நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. ஒரு திரைப்படம் தான் ஆரம்பித்தது… ஆனால் அது, பள்ளிகளில் ஒரு புதிய தொடக்கமாக மாறிவிட்டது. சினிமா — ஒரு பொழுதுபோக்காக மட்டுமல்ல. ஒரு மாற்றத்தின் துவக்கமாகவும் இருக்க முடியும்.










