பங்கு சந்தை

போதிய லாபம் கொடுக்காத என்எஸ்இ IPO

இந்தியாவின் மிகப்பெரிய பங்குச்சந்தை நிறுவனமான நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (NSE) இன்று பங்குச்சந்தையில் (BSE) பட்டியலிடப்பட்டது.

இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஓகளில் ஒன்றுதான் என்எஸ்இ IPO. 1994 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட என்எஸ்இ, தற்போது ரூ.25.37 கோடி முதலீட்டாளர் கணக்குகளைக் கொண்டுள்ளன. 2,978 நிறுவனங்கள் இதில் பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும், பங்கு மூலதன வருவாயை (ROE) அடிப்படையாக வைத்துப் பார்த்தால், உலகின் முதல் மூன்று பங்குச்சந்தைகளில் ஒன்றாகவும் NSE உள்ளது.

இந்த IPO மூலம் ரூ.22,561 கோடி ஆஃபர் ஃபார் சேல் முறையில் நிதி திரட்ட திட்டமிட்டு இருந்தது. இந்த நிலையில், இன்று 0.84 சதவீத லாபத்துடன் ரூ.1800-க்கு பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஓவாக இருந்தும், சமீபத்தில் வெளியான ஐபிஓகளை விடக் குறைந்த லாபம் கொடுக்கக் காரணம், இது முழுவதும் ஆஃபர் ஃபார் சேல் ஆக உள்ளது. மேலும் ஹூண்டாய் மோட்டார்ஸ், எல்ஐசி போன்ற பெரிய ஐபிஓகள் எதிர்பார்த்த அளவில் லாபம் கொடுக்கவில்லை. அந்த வரிசையில் என்எஸ்இயும் அடங்கும். இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் என்எஸ்இ IPO-வுக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இருப்பினும், இன்றைய வர்த்தக முடிவில் 1.79 சதவீதம் உயர்ந்து ரூ.1,817 ஆக உள்ளது.

Related Posts