இந்த நவம்பர் மாதம், பொங்கல் வெளியீட்டிற்காகக் காத்திருக்கும் இரண்டு பெரிய படங்களான நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ மற்றும் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ ஆகியவற்றின் முக்கியமான அப்டேட்டுகள் வெளியாகவிருக்கின்றன.
நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வினோத் கூட்டணியில் உருவாகும் ‘ஜனநாயகன்’ திரைப்படம், நடிகர் விஜய்யின் கடைசிப் படம் என்பதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது. தீபாவளிக்கு வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்த முதல் பாடல் தற்போது நவம்பர் முதல் வாரத்தில் வெளியாகும் எனத் தெரிகிறது. அனிருத் இசையில், நடிகர் விஜய் பாடியுள்ள ஒரு பாடல்தான் இந்த முதல் பாடலாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

பொங்கல் வெளியீட்டில் ‘ஜனநாயகன்’ படத்துடன் மோதுவதற்குத் தயாராக இருக்கும் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. வரும் ஜனவரி 14ஆம் தேதி ரிலீஸாக இருக்கும் இப்படத்தின் முதல் பாடல், நவம்பர் இரண்டாம் வாரத்தில் வெளியாக அதிக வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஜி.வி. பிரகாஷ் இசையில் உருவாகும் இந்தப் பாடலுக்காக எஸ்.கே. ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘கருப்பு’ திரைப்படத்தின் வெளியீடு குறித்து ஒரு மகிழ்ச்சியான செய்தி. முன்னதாக, தீபாவளிக்குப் பிறகு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக, இப்படம் ஜனவரி மாதமே வெளியாகும் என்று படகுழுவினர் கூறுகின்றனர்.

இந்த நவம்பர் மாதம் சினிமா ரசிகர்களுக்கு ஒரு டபுள் ட்ரீட்!
விஜய்யின் ‘ஜனநாயகன்’ மற்றும் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படங்களின் முதல் பாடல், அதோடு சூர்யாவின் ‘கருப்பு’ ரிலீஸ் தேதி அறிவிப்பு என இந்த மாதம் சினிமா ரசிகர்களுக்கு ஒரேக் கொண்டாட்டம்தான்.








