பொது

Captain Cool-னா அது தல தோனி மட்டும் தான்!

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சிஎஸ்கே அணியின் தற்போதைய கேப்டனுமான எம்எஸ் தோனி, எல்லோராலும் செல்லமாக தல தோனி, கேப்டன் கூல் என பல பெயர்களால் அழைக்கப்படுகிறார். அந்த Captain Cool என்ற பெயரை TRADEMARK செய்யும் முயற்சியில் தோனி தற்போது இறங்கியுள்ளார்.

2011 ஆண்டு உலகக் கோப்பையில் அடித்த சிக்ஸர் நம்மில் பலருக்கு emotional ஆன மொமெண்ட். இதுபோன்ற nail-biting மேட்ச்களிலும் கூட, இந்திய வீரர்களிடம் கோபம் காட்டாமல், சிரித்த புன்னகையுடன் நிதானமாக செயல்படுவது தோனியின் தனிச்சிறப்பு. டென்ஷன், கோபம், வெறுப்பு போன்ற உணர்வுகளை கட்டுப்படுத்தி, பல ஐசிசி ட்ரோப்பிகளை வென்றவர் அவர் தான்.

இன்று வரை ஐசிசி டி20 உலகக் கோப்பை, ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை (2011) மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி (2013) – என மூன்று விதமான ஐசிசி சாம்பியன் பட்டங்களை வென்ற ஒரே கேப்டன் தோனி தான்.

இந்நிலையில், Captain Cool என்ற பெயரை TRADEMARK செய்ய தோனி விண்ணப்பித்துள்ளார். இது Sports பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. TRADEMARK பதிவேடு போர்ட்டலின் படி, விண்ணப்பம் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான TRADEMARK ஜூன் 16, 2025 அன்று பதிவுசெய்யப்பட்டது.

இதன் மூலம், தோனியின் அனுமதி இல்லாமல் எந்த நிறுவனமும் Commercial நோக்கில் Captain Cool என்ற வார்த்தையை பயன்படுத்த முடியாது. இதற்கு முன் விராட் கோஹ்லி one8, ரொனால்டோ CR7, மைக்கேல் ஜோர்டன் Jumpman, உசைன் போல்ட் Lightning Bolt ஆகிய TRADEMARK-களை பெற்றிருக்கிறார்கள்.

Related Posts