பொது

விரைவில் வெளியாகிறது விவசாயி எக்ஸ்பிரஸ்… உழவர் நலத்துறை அமைச்சருடன் ஒரு மீட்..

விவசாயி எக்ஸ்பிரஸ் மாத இதழ் வெளியாகவுள்ளதையடுத்து தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சருடன் கோத்தாரி நிறுவனத்தின் டிஜிட்டல் மீடியா குழுவினர் சந்திப்பு.

நூறாண்டுகள் பழமை வாய்ந்த கோத்தாரி இண்டஸ்டிரியல் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் விவசாயிகளுக்கு தேவையான உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளை உற்பத்தி செய்து வருகிறது. மேலும் விவசாயத்திற்கு பயன்படும் டிரோன்களையும் உற்பத்தி செய்வதுடன் அதனை நேரடியாகவே விவசாயிகள் பயன்படுத்தும் வகையில் டிரோன் வாகன வசதியையும் உருவாக்கியுள்ளது.

கோத்தாரி நிறுவனத்தின் அங்கமாக பிஸினஸ் சார்ந்த ஆங்கில மாத இதழான இண்டஸ்டிரியல் எக்கனாமிஸ்ட், டிஜிட்டல் தளமான கோத்தாரி டிஜிட்டல் ஆகியவை ஏற்கனவே சிறப்பாக செயல் பட்டு வருகின்றன. இதன் அடுத்தகட்டமாக விவசாயிகளுக்கான ஒரு மாத இதழை கொண்டுவர கோத்தாரி நிறுவனத்தின் சேர்மேன் ஜெ.ரஃபீக் அகமது வழிகாட்டுதலை வழங்கினார்.

அதன்படி விவசாயி எக்ஸ்பிரஸ் என்னும் மாத இதழ் கோத்தாரி நிறுவனத்தின் சார்பில் விரைவில் வெளியாகவுள்ளது. கோத்தாரி நிறுவனத்தின் டிஜிட்டல் மீடியா குழுவினர், வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தை சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். அப்போது வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை செயலர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Posts