பொது

நோ ரோடு ஷோ – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

அரசியல் கட்சிகள் ‘ரோடு ஷோ’ நடத்த சென்னை உயர் நீதிமன்றம் தற்காலிகத் தடை விதித்துள்ளது. புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்படும் வரை எந்தக் கட்சிக்கும் ரோடு ஷோ நடத்த அனுமதி இல்லை.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பரப்புரையின் போது 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில், பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்கள் நடத்துவதற்கான புதிய மற்றும் விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (அக்டோபர் 27, 2025) இந்த வழக்கை விசாரித்தது.

அப்போது, உயர் நீதிமன்றம் அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதன்படி, பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்களை நடத்துவதற்கான புதிய விதிமுறைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் வரை, மாநிலத்தில் உள்ள எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ரோடு ஷோக்கள் நடத்த அனுமதி இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டது.

Related Posts