தொழில்

இத்தாலி கல்வி நிறுவனத்துடன் KICL ஒப்பந்தம்!

தமிழ்நாட்டில் பயிற்சி மையம் அமைக்க இத்தாலியின் அகாடமியா IUAD உடன் கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் லிமிடெட் (KICL) புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளதாக மும்பை பங்குச்சந்தையிடம் (BSE) தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டு முயற்சியில் நிறுவப்படும் இந்த பயிற்சி மையமானது ஆரம்பத்தில் காலணி மற்றும் ஃபேஷன் துறையில் கவனம் செலுத்தும் என்றும், பிற்காலத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டு மற்ற துறை சார்ந்த பயிற்சிகளும் வழங்கப்படும் என்றும் KICL நிறுவனம் தெரிவித்துள்ளது.

IUAD வின் கல்வி நிபுணத்துவம் மற்றும் KICLன் தொழில் நிபுணத்துவம் இணைந்து, இந்த துறையில் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முறை வாய்ப்புகளை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவை அனைத்தும் சர்வதேச தரத்தில், ஒரு கட்டமைக்கப்பட்ட திட்டத்தின் மூலம் வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது

இரண்டாம் கட்ட நகரங்களிலிருந்து 1 லட்சம் இளைஞர்களுக்கு உலகத்தரத்திலான பயிற்சி வழங்க, இத்தாலி, பிரான்ஸ் மற்றும் UK போன்ற நாடுகளின் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட, KICL நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ரஃபிக் அஹமது திட்டமிருப்பதாக கூறியுள்ளார். இத்தாலியில் அகாடமியா IUAD உடன் ஒப்பந்தம் போட்டுள்ளதைபோல், மிகவிரைவில் பிரான்ஸ், UK மற்றும் ஜெர்மனியுடனும் ஒப்பந்தங்கள் போடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts