தமிழக அரசின் ஒத்துழைப்புடன் பல்வேறு தொழிற்சாலைகளை நிறுவி வெற்றிநடைப் போட்டு வருகிறது KICL. உரத் தயாரிப்பு, Non-Leather Industries, சங்கிலித்தொடர் உணவகங்கள், இளைஞர்களுக்கான ட்ரோன் பயிற்சி மையம் போன்ற பல்வேறு துறைகளில் KICL கால்பதித்துள்ளது. மேலும், புதிய தொழிற் சாலைகளை பல மாவட்டங்களில் அமைக்க தீவிரமாக பணி நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், அசாம் உள்ளிட்ட சில மாநிலங்களில் தொழில் துவங்க,அந்தந்த மாநில அரசுடன் KICL புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துள்ளது. கத்தார் நாட்டிலும் தனது கிளைகளை KICL விரிவுபடுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, புதுச்சேரி மாநிலத்திலும் புதிய தொழில் துவங்க KICL முன்வந்துள்ளது. இந்நிலையில், புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமியை KICL நிறுவனத்தின் தலைவர் டாக்டர். K. ரஃபிக் அஹமது மரியாதை நிமித்தமாக இன்று நேரில் சந்தித்து பேசினார்.









