தொழில்

தோல் பதனிடும் தொழில்துறையின் பிதாமகர் ஹாஷிம் சாஹிப் – சில குறிப்புகள்..

தோல் பொருள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் K.H. குழுமத்தின் தலைவரும், தென்னிந்திய தோல் பதனிடுவோர் மற்றும் முகவர்கள் பேரவையின் புரவலருமான (Patron) ஜனாப் ஹாஜி மலாக் முகமது ஹாஷிம் சாஹிப் இன்று (ஜூன் 5) உயிரிழந்தார். அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ”இராணிப்பேட்டை பகுதியில் தோல் பதனிடும் தொழில்துறையின் பிதாமகராக விளங்கி, பல பேருக்கு வேலைவாய்ப்பளித்து, இஸ்லாமிய மக்களிடையே பெரும் மரியாதை பெற்றுத் திகழ்ந்தவர் முகமது ஹாஷிம் சாஹிப்” என்று அவரது புகழை முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

KH Exports India Private Limited-ன் தலைவராக இருந்த சாஹிப், KH Foundation-னின் இயக்குநராகவும், Indian Leather Industry Foundation (ILIFO)-வின் இயக்குநராகவும் இருந்துள்ளார். மேலும், Chennai Environmental Management Company of Tanners (CEMCOT) மற்றும் Council for Leather Exports (CLE) -இன் முன்னாள் தலைவராக இருந்துள்ளார்.

தோல் பொருள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி துறையில் முன்னோடியான சாஹிப், CLE-வின் மதிப்புமிக்க “வாழ்நாள் சாதனையாளர் விருது” உட்பட பல விருதுகள் மற்றும் பாராட்டுகளை பெற்றுள்ளார். 60 ஆண்டுகளுக்கு மேலாக தோல் தொழில்துறையில் ஜாம்பவானக திகழ்ந்த இவருக்கு “Doyen of the Leather Industry” என்ற சிறப்பு பட்டமும் வழங்கி CLE கௌரவித்துள்ளது.

வணிகம் மட்டுமல்லாமல், இறைத்தொண்டிலும் நாட்டம் கொண்டவராக முகமது ஹாஷிம் சாஹிப் இருந்திருக்கிறார். வேலூரில் உள்ள ஜாமியா பாகியாத்-உஸ்-சாலிஹாத்தின் (Jamia Baqiyat-us-Salihat) தலைவராகவும், மெல்விஷாரத்தின் மதரஸா மிஃப்தாஹுல் உலூமின் (Madrasah Miftahul Uloom) தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார்.

தோல் தொழில்துறையில் முன்னோடியாக விளங்கிய K.H. குழுமத் தலைவர் முகமது ஹாஷிம் சாஹிப்பின் மறைவுக்கு, தோல் அல்லா காலணி உற்பத்தியில் முன்னணி வகிக்கும் ஃபீனிக்ஸ் கோத்தாரி நிறுவனத்தின் தலைவர் ரஃபிக் அகமது நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

Related Posts