இந்தியாவில் தொழில்துறையில் அதிகரித்து வரும் உயிரிழப்புக்களை குறைக்க சென்னை ஐஐடி புதிய படிப்பை அறிமுகம் செய்துள்ளது. தொழில்துறையில் ஒவ்வொரு நாளும் நிகழும் உயிரிழப்புகளும் ஒரு குடும்பத்தின் வாழ்க்கையையே மாற்றியமைத்துவிடுகின்றன. இன்று வேலைக்கு சென்றவர் வீட்டிற்கு மீண்டும் திரும்புவார் என்ற நம்பிக்கையை, ஒரு விபத்து அழித்து விடுகிறது. அப்படி

இந்தியாவில் பொருள் உற்பத்தி, சுரங்கம், எரிசக்தி போன்ற துறைகளில் 2024-ல் 240 பணியிடங்களில் நடந்த விபத்தில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 850-க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் இன்டஸ்ட்ரியல் குளோபல் யூனியன் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2017 மற்றும் 2020க்கு இடையில், இந்தியாவின் ஒவ்வொரு நாளும் தொழிற்சாலைகள் விபத்துகளால் மூன்று பேர் உயிரிழக்கின்றனர் மற்றும் 11 பேர் காயமடைந்தனர் என்று RTI தரவுகள் தெரிவிக்கின்றன. கடுமையான சட்டங்கள் மட்டும் இதனை சரிசெய்ய முடியாது தொழில்துறை பாதுகாப்பு நடைமுறைகள், நெறிமுறைகள் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாததும் இதற்கு முக்கிய காரணம்.
இந்த உயிரிழப்புகளுக்கு திர்வு காண, செயல்முறைப் பாதுகாப்பு சவால்களை நிர்வகிப்பதில் ஊழியர்களின் திறன்களை மேம்படுத்தும் வகையில் பாதுகாப்பு செயல்பாடுகளுக்கான முதுநிலை டிப்ளமோ படிப்பை சென்னை ஐஐடி நிறுவனம் முதன்முறையாக தொடங்கியுள்ளது.
இதுகுறித்து பேராசிரியர் ராஜகோபாலன் சீனிவாசன் கூறும்போது, “தொழில்துறையில் பணிபுரியும் வல்லுநர்களுக்காக பிரத்தியேகமாக இப்பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்த தங்கள் அறிவை மேம்படுத்திக் கொள்ளவும், விரிவுபடுத்திக் கொள்ளவும் இயலும். தனிநபர்கள் தங்கள் திறனை மேம்படுத்தவும், பாதுகாப்பு நெறிமுறைகள் பற்றிய புரிதலை ஏற்படுத்தவும், சமகாலப் பாதுகாப்பு தரநிலைகளுக்கு இணையாக இருக்கவும் ஒரு வாய்ப்பாக அமையும். இதன் மூலம் பாதுகாப்பான, நெகிழ்ச்சியான பணியிட சூழலுக்கு பங்களிக்க முடியும்” என்றார்.

பணிபுரியும் வல்லுநர்களுக்குத் தேவையான நெகிழ்வுத் தன்மையை வழங்கும் அதே வேளையில், சென்னை ஐஐடி வழங்கும் பட்டப்படிப்பின் கல்வித் திறனை நிலைநிறுத்தும் வகையில் முதுகலை டிப்ளமோ படிப்பு (செயல்முறை பாதுகாப்பு) வடிவமைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் முதல் டிசம்பர் வரை, ஜனவரி முதல் ஏப்ரல் வரை, மே முதல் ஆகஸ்ட் வரை என மூன்று செமஸ்டர்களைக் கொண்டதாக இந்த டிப்ளமோ படிப்பு அமைந்துள்ளது. ஒவ்வொரு பருவத்திலும் மாணவர்கள் அதிகபட்சமாக மூன்று பாடங்களை எடுத்துப் படிக்கலாம். முழுப் பாடத்திட்டத்தையும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் முடிக்க முடியும்.
வேதியியல், சிவில் இன்ஜினியரிங், மெக்கானிக்கல், இன்ஸ்ட்ரூமெண்டேஷன் இன்ஜினியரிங், பெட்ரோலியம் மற்றும் தொடர்புடைய பிரிவுகளில் பிஇ/பிடெக் பட்டம் பெற்றவர்கள் அல்லது வேதியியலில் முதுநிலைப் பட்டத்துடன் இரண்டாண்டு அனுபவம் உடையவர்களை இதற்கு தகுதியானவர்கள். சென்னை ஐஐடி வளாகம் சாராத அனைத்து கல்வி மற்றும் புறவெளி நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் மக்கள் தொடர்பு மற்றும் டிஜிட்டல் கல்வி மையம் (Center for Outreach and Digital Education) மூலம் இப்பாடத்திட்டம் ஆன்லைன் முறையில் செயல்படுத்தப்படும்.
விண்ணப்ப பதிவுக்கு மே 31, 2025 கடைசி நாள். ஜூலை 13, 2025 அன்று நுழைவுத் தேர்வு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பின்வரும் இணைப்பின் மூலம் விண்ணப்பிக்கலாம் – https://code.iitm.ac.in/processsafet








