இந்தியாவின் பங்குச்சந்தை சமீபகாலமாக மிகப்பெரிய வளர்ச்சியை சந்தித்து வருகிறது. இதன் விளைவாக, இந்திய நிறுவனங்களை செபி (SEBI) மிகுந்த கவனத்துடன் கண்காணித்து வருகிறது. ஆனால், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி செபியின் முன்னாள் தலைவர் மாதபி பூரி புச் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு, இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பங்குச்சந்தை மற்றும் பத்திரங்களை கண்காணித்து ஒழுங்குபடுத்தும் அமைப்பாக செபி செயற்படுகிறது. இந்த அமைப்பின் மூலம், இந்தியாவில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பரப்பும் தகவல்கள் சரியானவையா என்பதை ஆய்வு செய்து, அவற்றை ஒழுங்குப்படுத்துகிறது. ஆனால் இந்த நிறுவனம் சரியாக செயல்படுகிறதா?, அவை வெளியிடும் தகவல்களில் உண்மைதன்மை இருக்கிறதா? என்ற கேள்விகள் சமீபத்தில் எழுந்துள்ளன.

இந்த கேள்விக்கு காரணமாக இருந்தது அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம். இந்த நிறுவனம் பங்குச்சந்தையில் நடைபெறும் மோசடிகள் மற்றும் நிதி சார்ந்த ஊழல்களை வெளிப்படுத்துவதில் சிறப்பு பெற்றது. அதானி குழுமம் குறித்து ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையில், அதானி குழுமம் வெளிநாடுகளில் போலியான நிறுவனங்களை உருவாக்கி பங்குகளின் விலையை செயற்கையாக உயர்த்தியதாகவும், கோடிக்கணக்கில் மோசடி செய்ததாகவும் கூறியது.
அந்த அதானி நிறுவனங்களில், செபியின் தலைவர் மாதபி புச் மற்றும் அவரது கணவர் கோடிக்கனக்கான ருபாய் மதிப்பிலான பங்குகளை வைத்திருப்பதாவும் அதற்கான ஆதாரங்கள் இருப்பதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் தெரிவித்தது. ஆனால், அதற்கு மாதபி புச் மறுப்பு தெரிவித்தார்.
இது மட்டுமல்லாமல், விதிமுறைகளை மீறி ICICI வங்கியிடமிருந்து ரூ. 16.8 கோடி ஊதியம் பெற்றதாகவும், செபி ஊழியர்களின் சிலர் அவர் மீது பணிசார்ந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதன் காரணமாக எதிர்க்கட்சிகள், லோக்பால் அமைப்பில் புகார் அளித்தனர்.

இந்தக் குற்றச்சாட்டுகள் நிலவும் நிலையில், மாதபி புச் அவர்களின் பதவிக்காலம் 2024 பிப்ரவரி மாதத்தில் முடிவடைந்தது. குற்றச்சாட்டுகள் காரணமாக அவருக்கு பதவி நீடிப்பு வழங்கப்படவில்லை.
இந்நிலையில், மே 28ம் தேதி லோக்பால் அமைப்பின் தீர்ப்பு வந்தது. அதில், “மாதபி புச் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பெரும்பாலும் யூகங்கள் மட்டுமே. உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை. எனவே, அவர் குற்றமற்றவர், அவரது மீது வைக்கப்பட்ட புகார்கள் உண்மை அல்ல,” என்று லோக்பால் அமைப்பு தெரிவித்தது. ஆனால் இந்த குற்றச்சாட்டு வைக்கப்பட்ட சில மாதங்களிலேயே ஹிண்டன்பர்க் நிருவனர் அந்த நிருவனத்தை முடுவதாக அறிவித்தார். இது இந்த புகாரில் முக்கிய திருப்புமுனையாக இருந்தது என பொருளாதர நிபுனர்கள் தெரிவிக்கிறனர்.









