பொதுவாக May Day என்பது மே 1 ஆம் தேதி கொண்டாடப்படும் தொழிலாளர் தினத்தை குறிப்பதாகும். ஆனால் விமானமோ கப்பலோ ஆபத்தில் சிக்கும்போது இந்த சொல் இப்படி பொருள் கொள்ளப்படுவது இல்லை.
அகமதாபாத் விமான விபத்தில் போயிங் 787-8 டிரீம் லைனர் விமானம் விபத்துக்குள்ளாகி 241 பேர் உயிரிழந்துள்ளனர். விமானத்தில் இருந்த ஒருவர் மட்டும் அதிர்ஷ்ட வசமாக உயிர் பிழைத்துள்ளார்.

விமானம் புறப்பட்ட உடனேயே கட்டுப்பாட்டு அறைக்கு விமானி சுமீத் சபர்வால் May Day அழைப்பு கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக DGCA வெளியிட்டுள்ள அறிக்கையில், “23வது ஓடுபாதையில் இருந்து விமானம் புறப்பட்ட உடனேயே விமான நிலைய கட்டுப்பாட்டாளருக்கு அபாய அவசர அழைப்பை விமானி மேற்கொண்டுள்ளார். அதன் பிறகான அழைப்புகளுக்கு விமானியிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை” என்று குறிப்பிடப்படுள்ளது.
Mayday அழைப்பு:
Mayday அழைப்பு என்பது விமான பயணத்தின் போதோ அல்லது கப்பல் பயணத்தின் போதோ அபாயகரமான சூழலில் இருந்தால் ரேடியோ தொடர்பு மூலம் அவசரமாக விடுக்கப்படும் அழைப்பாகும். இது “maider” எனும் பிரஞ்சு சொல்லில் இருந்து வந்தாதாகும். இந்த சொல்லுக்கு help me என்று ஆங்கிலத்தில் அர்த்தம். தமிழில் சொல்வதென்றால் காப்பாற்றுங்கள் என கூக்குரல் இடுவதற்கு இந்த சொல் சமமானது. என்ஜின் செயலிழப்பு, தீ விபத்து, உள்ளிட்ட ஆபத்தான சூழலில் இந்த Mayday அழைப்பு விடுக்கப்படுகிறது.
இது 1920 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையில் உள்ளது. ஒரு விமானமோ அல்லது கப்பலோ ஆபத்தில் சிக்கிக்கொண்டால் அதிலிருந்து ரேடியோ வழியாக Mayday, Mayday, Mayday என 3 முறை கூறி அழைப்பு விடுப்பர்.

இவ்வாறாக அழைப்பு விடுத்ததும் அந்த அலைவரிசையில் பிற அழைப்புகள் குறுக்கிடாதவாறு clear செய்யப்படும். Mayday அழைப்பு விடுத்த விமானி தனது விமானத்தின் இருப்பிடம், ஆபத்தின் தன்மை ஆகியவற்றை தெரிவிக்கலாம். அவர்களை மீட்க கட்டுப்பாட்டு அறையிலிருந்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
பெரும்பாலும் இந்த அழைப்பு ஆபத்துக்குள்ளாகும் விமானம், கப்பலில் இருந்து மட்டுமே விடுக்கப்படுகிறது. சில சமயங்களில் ஆபத்தில் இருக்கும் கப்பல், விமானத்தில் தொலைத்தொடர்பு செயல்படாத சூழலில் அருகில் உள்ள விமானம், கப்பலில் இருந்து இந்த அழைப்பு மேற்கொள்ளப்படுகிறது.








