பொது

சபரிமலைக்கு வழங்கிய தங்கத் தகடுகளுக்குப் பதிலாக செம்பு மாற்றப்பட்டதா?

1998-ல் தொழிலதிபர் விஜய் மல்லையா சபரிமலை கோயிலுக்கு நன்கொடையாக வழங்கிய தங்கத் தகடுகள் இப்போது சர்ச்சையைக் கிளப்பி உள்ளன. சபரிமலை கருவுளங்களில் வாயிலில் இருந்த காவல் தெய்வமான துவாரபாலகர் சிலைகளில் 30 கிலோ தங்கமும் 1,900 கிலோ செம்பும் பூசப்பட்ட தகடுகள் 2019-ல் சிரமைப்புக்காக அனுப்பப்பட்டன. ஆனால், திரும்பி வந்தபோது சுமார் 4.54 கிலோ தங்கம் காணாமல் போனது. இது தற்பொழுது புகம்பமாக கிளம்பியுள்ளது.

இந்த தகடுகள், திருவிதாங்கூர் தேவசம் வாரியத்தின் அனுமதியுடன், சென்னை அம்பத்துரில் உள்ள “ஸ்மார்ட் கிரியேஷன்ஸ்” என்ற நகை நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டன. ஆனால் வழியில் அந்த தகடுகள் நேராக சென்னையை வரவில்லை. 39 நாட்கள், அந்த தங்கங்கள் தென்னிந்தியாவின் பல இடங்களில் கொண்டுசென்றதாக தகவல் கசிந்தன. ஆந்திரா, பெங்களூர், கோட்டயம் மற்றும்… இவை அனைத்தையும் தாண்டு மலையாள நடிகர் ஜெயராமின் வீட்டிற்கும் சென்றதாக கோவில் நிர்வாகம் சார்பில் ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அவர் வீட்டில் அந்தத் தகடுகள் பூஜை செய்து, பின்னர் கோயிலுக்கு திருப்பி அனுப்பப்பட்டன.

அந்த இடையே என்ன நடந்தது என்பது இப்போது கேரள அரசியலின் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நிதிமன்றங்களில் கொடுக்கபட்ட அறிக்கையில், ஜூலை 19, 2019 அன்று தங்க உறையுடன் 42.8 கிலோகிராம் இருந்த தங்க தகடுகள், ஆகஸ்ட் 29 அன்று திரும்பியபோது 38.25 கிலோ மட்டுமே இருந்தன. இந்த 4.54 கிலோ தங்கம் சென்ற இடம் இன்று வரை மர்மம் தான்.

இந்த வழக்கில் தொடர்புடைய உன்னிகிருஷ்ணன் போற்றி, “அவரிடம் கொடுத்த துவாரபாலகர் சிலைகள் பராமரிப்புக்காக கொடுக்கப்பட்டது செம்பால் ஆன தகடுகள் தான் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து பேசிய நடிகர் ஜெயராம், ‘‘எலெக்ட்ரோ பிளேட்டிங்’ பணிக்காக தங்கத் தகடுகள் சென்னை எடுத்து செல்லப்படுகின்றதாக உன்னிகிருஷ்ணன் கூறினார். கோயிலுக்கு அனுப்பி வைப்பதற்கு முன்பு எனது வீட்டில் சிறிது நேரம் வைத்து பூஜை செய்ய முடியுமா என்று கேட்டேன். அவரும் ஒப்புக்கொண்டதால், சபரிமலை கோயில் தங்கத் தகடுகளை என் வீட்டுக்கு கொண்டு வந்து பூஜை செய்தனர். உடனடியாக கோயிலுக்கும் அனுப்பி வைத்தனர். இதற்காக, உன்னிகிருஷ்ணனுக்கு நான் பணம் எதுவும் தரவில்லை’’ என்றார்.

இதில் கோயிலின் நகைகளை பாதுகாக்க வேண்டியவர்களே, அதை தனிநபர் வீடுகளுக்கு எடுத்து சென்று பூஜைகள் நடத்த அனுமதித்ததற்கும், அந்த தங்கம் எங்கே சென்றது என்பதைப்பற்றி எந்தப் தகவலும் இதுவரை இல்லை இது அந்த கோவில் நிர்வகத்தின் தவறு என எதிர்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த வழக்கை விரைவாக விசாரித்து விரிவான அறிக்கை வழங்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு கேரள நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் புதுப்பித்தலை மேற்பார்வையிட்ட உன்னிகிருஷ்ணன் போற்றியின் சகோதரியின் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் உன்னிகிருஷ்ணன் போற்றி, சபரிமலை முன்னாள் நிர்வாக அதிகாரி முராரி பாபு, முன்னாள் தேவசம்போர்டு செயலர் ஜெயஸ்ரீ, முன்னாள் திருவாபரண கமிஷனர்கள் பைஜூ, ராதாகிருஷ்ணன், முன்னாள் எக்ஸிகியூட்டிவ் ஆப்பீசர்கள் சுதிஷ்குமார், ராஜேந்திரபிரசாத், அசிஸ்டெண்ட் இன்ஜினியர் சுனில்குமார், முன்னாள் அட்மினிஸ்டேட்டிவ் ஆப்பீசர்கள் ஸ்ரீகுமார், ராஜேந்திரன் நாயர் ஆகியோருக்கு மீது வழக்கு பதியபட்டு விசாரணை நடந்து வருகிறது.

இதில் பல கேள்விகள் நாம் அனைவருக்கும் எழுந்துள்ளன. இது விஜய் மல்லையா கொடுத்த அதே தங்கமா?… புதுபிக்கும் பொழுது தங்கத்தை மாறிவிட்டார்கள?… இந்த மோசடியில் யார் மீது குற்றம்சாட்டப்படும்? என குழப்பங்கள் நிடிக்கின்றன.

Related Posts