நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஃப்ரீடம்’ படத்தின் ட்ரைலர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
சில மாதங்களுக்கு முன், இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் நடிகர் சசிகுமார், நடிகை சிம்ரன் முன்னனி கதாபாத்திரத்தில் நடிச்சு வெளியான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் மிகப்பெரும் வெற்றியடைந்தது. இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு தப்பிவந்த தமிழ் குடும்பம் படும் கஷ்டங்களை இயக்குநர் நகைச்சுவை கலந்து படமா கொடுத்தது மக்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது.
நடிகர் சசிகுமாருக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு வெற்றி படமா இது அமைந்தது. அந்த வரிசையில் மீண்டும் ஒரு இலங்கை தமிழரா சசிகுமார் நடித்திருக்கும் படம்தான் ’ஃப்ரீடம்’. சத்யசிவா இயக்கியிருக்கும் இந்த படத்தில் ஜெய் பீம் புகழ் நடிகை லிஜொமொல் கதாநாயகியா நடித்திருக்கிறார். இதற்குமுன் கழுகு, சவாலே சமாளி மற்றும் 1945 திரைப்படங்களை சத்யசிவா இயக்கியுள்ளார்.

’ஃப்ரீடம்’ படத்தின் கிளிம்ப்ஸ் காட்சிகள் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இலங்கை அகதிகளாக சிறைச்சாலையில் சிக்கிக்கொண்ட சசிகுமார் படும் அவஸ்தைகளை ட்ரைலர் கண்முன்னே காட்டுகிறது. ஜிப்ரானின் இசை கூடுதல் பலம் சேர்க்கிறது. இந்த திரைப்படம் வரும் ஜூலை 10ஆம் தேதி வெளியாகியுள்ளது.









