பொது

மோசடி Loan Ads Vs நம்பிக்கையான Apps.. எப்படி தெரிஞ்சிக்கலாம்?

“குறைந்த வட்டி”, “உடனடி லோன்”, “சிபில் ஸ்கோர் தேவையில்லை” போன்ற ஆசையை தூண்டும் விளம்பரங்கள் சிலரை Instant Loan Appகள் பக்கம் இழுக்கின்றன. உடனடியாக கடன் கிடைப்பதால், எதையும் விசாரிக்காமல் சிலர் கண்மூடித்தனமாக தங்களின் தனிப்பட்ட விவரங்களை சமர்ப்பித்து பணத்தை பெற்றுக்கொள்கிறார்கள். பின்னர், black Mail, பண இழப்பு என பல மோசடிகளில் சிக்கி சின்னாபின்னமாகி மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.

Loan Ads எப்படி மோசடி செய்கின்றன?

Instant Loan என்ற வலையின் ஆபத்தை உணராமல், தங்கள் பெயர், ஆதார் எண், பேன்கார்டு, வங்கி கணக்கு விவரங்கள் போன்ற முக்கிய தரவுகளை பகிர்கிறார்கள். இந்தவகை appகளை பயன்படுத்த, contact list, gallery ஆகியவற்றை பயன்படுத்துவதற்கான அனுமதியை பயனாளர்களிடம் வாங்கிவிடுகின்றன. பின்னர் அந்த தரவுகளை திருடி, பயனாளர்களை அச்சுறுத்தி, இந்த Instant Loan App மோசடி கும்பல் பணம் பறிக்கின்றது.

இதுபோன்ற மோசடி கும்பலிடம், வாங்கிய கடனைவிட அதிகப்படியான பணத்தை பறிகொடுத்த சிலர், மேலும் மேலும் பணம் கேட்டு டார்ச்சர் தொடரவே, மன

அழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு விபரீத முடிவை எடுக்கிறார்கள். அதுபோல் பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன.

நம்பிக்கையான Loan Apps-ஐ எப்படிக் கண்டுபிடிப்பது?

நீங்கள் பயன்படுத்தும் loan app அதிகாரப்பூர்வமானதா? என்பதைக் கண்டறிய சில முக்கியமான வழிமுறைகள் இருக்கின்றன.

RBI மூலம் பதிவு செய்யப்பட்டதா எனச் சரிபார்க்கவும்:

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தளத்தில், அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட NBFC (Non-Banking Financial Company) நிறுவனங்களின் பட்டியல் உள்ளது. உங்கள் loan app அந்த பட்டியலில் இருக்கிறதா என்பதைப் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Google Play Store / Apple App Store-ல் பயனர் மதிப்பீடு (ratings) மற்றும் விமர்சனங்களைப் (customer review) பார்வையிடுங்கள். மிகக் குறைந்த ரேட்டிங் மற்றும் ‘மோசடி’, ‘scam’, ‘cheating’ போன்ற காமெண்ட்டுகள் அதிகமாக இருந்தால் அவற்றை தவிர்த்துவிடுதல் நல்லது.


தேவையற்ற அனுமதிகள் கேட்டால் … உஷார்..

உங்கள் கேமரா, மொபைல் contacts, storage போன்றவைகளை பயன்படுத்திக்கொள்ள Loan app நிறுவனங்கள் அனுமதி கேட்பார்கள். கவனமாக அதன் Terms and Conditions ஆகியவற்றை படித்துவிட்டு, பின்னர் முடிவு செய்யுங்கள்.

பரிந்துரைக்கப்பட்ட செயலிகளை மட்டுமே பயன்படுத்துங்கள்:

“Low Interest – High Loan” என்று கூறும் எந்த மோசடி விளம்பரத்தையும் நம்பி யாரும் பணத்தை இழக்கவேண்டாம் என்று பலமுறை சைபர் கிரைம் காவல்துறையினர் எச்சரித்தாலும், இந்த மோசடிகள் மீண்டும் மீண்டும் அரங்கேறிக்கொண்டே இருக்கின்றன. அதனால், அரசு அங்கீகாரம் பெற்ற வங்கிகள், நிதி நிறுவனங்கள் பரிந்துரைக்கும் appகளை மட்டுமே பயன்படுத்துவது பாதுகாப்பானது.

 

Related Posts