பொது

இனி வண்ண வேட்பாளர்கள் புகைப்படம்: தலைமை தேர்தல் ஆணையர்

தமிழ்நாடு சட்டசபை தேர்தலை முன்னிட்டு சென்னையில் 2 நாட்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து பல முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளார்.

“தமிழ்நாட்டில் நடைபெற உள்ள தேர்தல் ஒரு சாதாரண நிகழ்வு அல்ல; அது ஜனநாயகத் திருவிழா. மக்கள் உற்சாகமாக பங்கேற்று கொண்டாட வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.

இதற்குப் பிறகு 2026 தேர்தலுக்கான வாக்காளர் விவரங்களை வெளியிட்டார். தமிழ்நாட்டில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளதாகவும், இதில் 2.87 கோடி பெண்கள் வாக்காளர்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 22–29 வயது வாக்காளர்கள் – ஒரு கோடி பேர், 18–19 வயது புதிய வாக்காளர்கள் – 12.5 லட்சம் பேர் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் ஏற்பாடுகள் விருவிருப்பாக நடைபெற்று வருவதாகவும், மாநிலம் முழுவதும் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

EVM-களில் இதுவரை வேட்பாளர்களின் புகைப்படங்கள் பிளாக் அண்ட் வைட் வடிவில் இருந்த நிலையில், இந்த தேர்தலில் வாக்களிப்பது மேலும் எளிதாக வண்ண புகைப்படம் இடம்பெறவுள்ளதாக கூறினார். அதேபோல், 2 மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு நிலவரங்கள் வெளியிடப்படும் என்றும், தபால் வாக்குகள் இரண்டு கட்டங்களாக எண்ணப்படும் என்றும் பல தகவல்களை தெரிவித்தார்.

“தமிழ்நாட்டில் நடைபெறும் தேர்தல், இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகிற்கே முன்னுதாரணமாக அமையும்,” என அவர் தெரிவித்தார்.

Related Posts