பொது

டெல்லி குண்டு வெடிப்பு: NIA வெளியிட்ட புதிய தகவல்கள்

“டெல்லி செங்கோட்டை அருகே மிகப் பெரிய வெடி சத்தம். திரும்பிப் பார்த்தபோது, ஒரு ஆணின் கை எங்கள் காலடியில் வந்து விழுந்தது. என்ன நடந்தது என பார்க்கும் கண்களில் தெரிந்தது — தெரு முழுக்க சிதறிக் கிடந்த உடல் பாகங்களே…” – இதுதான் டெல்லியில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தை நேரில் பார்த்தவர்களில் ஒருவரின் மனதை உலுக்கும் பேட்டி…

டெல்லி செங்கோட்டை அருகே ஹூண்டாய் i20 கார் டிராபிக் சிக்னலில் நின்றபோழுது திடீரென வெடித்தது. அரை கிலோ மீட்டர் வரை அருகில் இருந்தவர்கள் இதில் படுகாயம் அடைந்தனர். இதுவரை 13க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இது தீவிரவாத தாக்குதல் தான் என்பதை NIA உறுதிபடுத்தியுள்ளது.

இந்த வழக்கின் முதல் கட்ட விசாரணையில் அந்த காரை ஓட்டியவர் உமர் முகமது என NIA தரப்பில் வீடியோ ஆதாரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வெடித்த வெள்ளை ஹூண்டாய் i20 கார் பல நபர்களிடம் கைமாறி இவரிடம் வந்ததாக செர்ந்துள்ளது. இந்த விசாரணையில் பல தகவல்கள் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த உமர் முகமது குறித்து விசாரணை நடத்தியபோது, ஜம்மு–காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள ஃபரிதாபாத் அல்-பலா மருத்துவக் கல்லூரியில் மருத்துவராகப் பணியாற்றியவர் என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில், ஹரியானா காவல்துறையினரால் திங்களன்று கைது செய்யப்பட்ட 2 மருத்துவர்களான டாக்டர் அதீல் அகமது ராதர் மற்றும் டாக்டர் முஜம்மில் ஷகீலின் நெருங்கிய உதவியாளராக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

1

ஜம்மு–காஷ்மீரில் நடந்த இந்த கைதுக்கும் டெல்லியில் நடந்த தாக்குதலுக்கும் என்ன தொடர்பு என நீங்கள் கேட்பது புரிகிறது.

இதற்கு ஜம்மு–காஷ்மீரில் நடந்த கைது பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும். அனந்த்நாக் அரசு மருத்துவக் கல்லூரி (GMC)யில் மருத்துவராக இருந்த அதீல் அகமது ராதர், ஸ்ரீநகரில் ஜெய்ஷ்–இ–முகம்மது அமைப்பைப் புகழ்ந்து போஸ்டர் ஒட்டினார். ஜெய்ஷ்–இ–முகம்மது என்பது பயங்கரவாத அமைப்பு. இதனால் உத்தரப்பிரதேசம் சஹாரன்பூரில் அவர் கைது செய்யப்பட்டார்.

பின்னர் அனந்த்நாக் GMCயில் போலீசார் நடத்திய சோதனையில், அதீலின் லாக்கரில் இருந்து AK–47 துப்பாக்கி மற்றும் 2,900 கிலோ வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனுடன் தொடர்புடைய மருத்துவர் முஜம்மில் ஷகீல் நவம்பர் 10 அன்று கைது செய்யப்பட்டார். பின்னர் பெண் மருத்துவர் டாக்டர் ஷாஹீன் ஷாஹித் உள்ளிட்ட பெரிய கும்பல் கைது செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் ஒரே கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பதால், உமர் முகமது பயந்து தன்னிடம் இருந்த டெட்டனேட்டரை பயன்படுத்தி செங்கோட்டை அருகே நெரிசலான பகுதியில் பயங்கரவாத தாக்குதலை நடத்தியதாக NIA வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்பு, 2011 செப்டம்பர் 7ஆம் தேதி டெல்லி ஐகோர்ட் வளாகத்தின் நுழைவு வாயிலில் பயங்கர குண்டு வெடிப்பு நடந்தது. அந்தச் சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்ததுடன், 79 பேர் காயமடைந்தனர். 14 ஆண்டுகள் கழித்து, 10.11.2025 டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பு நிகழ்ந்திருப்பது டெல்லி மக்களிடையே மட்டுமின்றி, இந்திய மக்களிடையிலும் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts