பொது

128 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒலிம்பிக் போட்டியில் இடம் பெறும் கிரிக்கெட்!

2028 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவிருக்கும் கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில், கிரிக்கெட் விளையாட்டு முதன்முறையாக நிரந்தர இடத்தைப் பிடித்துள்ளது. இது கிரிக்கெட் ரசிகர்களுக்குப் பெரும் எதிர்பாராத உற்சாகத்தை அளித்துள்ளது.

ஒலிம்பிக் வரலாற்றில் கிரிக்கெட் இடம்பெறுவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்னர், 1900 ஆம் ஆண்டு பாரிஸில் நடந்த ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெற்றது. தற்போது, கிரிக்கெட் நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு ஒலிம்பிக்கில் ஒரு விளையாட்டாக சேர்க்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் விரும்பும் டி20 (Twenty-20) போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

இப்போட்டிகளில் ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணி என இருபாலருக்கான பிரிவுகளும் இடம்பெறுகின்றன.

உலகெங்கிலும் இருந்து குறிப்பிட்ட 6 அணிகள் மட்டுமே இப்போட்டிகளில் பங்கேற்கும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) அறிவித்துள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் மொத்தம் 28 விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், புதிதாக கிரிக்கெட் இடம்பெற்றுள்ளது.

Related Posts