பொது

ஒட்டிப் பிறந்த இரட்டையர்களில் ஒருவருக்கு திருமணம்… மற்றொருவர் சிங்கிள்!

நம்மில் பலர் மாற்றான் திரைப் படத்தை பார்த்திருப்போம். இதில் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களாக சூர்யா நடித்திருப்பார். எமோஷனல், காமெடி, ஆக்ஷன் என அனைத்தும் கலந்த படமாக இது அமைந்திருந்தது. இந்திய சினிமாவில் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் கதைக் களமாக வைத்து வந்த முதல் படம் மாற்றான் தான்.

அந்த படத்தில் போலீஸ் ஸ்டேஷனில் நடக்கும் ஒரு காமெடி காட்சியில், போலீஸ் அதிகாரி சூர்யாவிடம், “நீங்கதான் அந்த conjoined twins ஆ?” என கேட்பார். பின்னர் கதாநாயகி காஜல் அகர்வாலை இருவரில் ஒருவர் காதலிப்பதும் மற்றொருவர் சிங்கிள் என்றும் கூறுவார்கள். இதைக் கேட்டு போலீசாரும் குழம்பிப் போவார்கள்.

அதே போல நிகழ்வே இப்போது அமெரிக்காவில் நடந்துள்ளது!

அமெரிக்க யூடியூபர்களான ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் கார்மென் மற்றும் லுபிட்டி சமீபத்தில், அவர்களில் ஒருவரான கார்மெனுக்கு திருமணம் நடந்ததுள்ளது. சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக உள்ள இவர்கள், யூடியூபில் 3 லட்சத்துக்கும் அதிகமான Subscribers கொண்டுள்ளனர். இதுமட்டுமல்லாமல், இன்ஸ்டாகிராமிலும் கார்மெனுக்கு 80,000 Follower, லுபிட்டிக்கு 1.5 லட்சம் Follower உள்ளனர். இந்த இரண்டு பெண்களுக்கும் தற்போது 22 வயதாகின்றனர்.

திருமணம் திருமணம்

பிறக்கும் போதே, இருவரும் கல்லீரல், இடுப்பு மற்றும் பல உடல் உறுப்புகளை பகிர்ந்துள்ளனர். இவர்களால் குழத்தை பெற்றுக்கொள்ள இயலாது. அதுமட்டுமல்ல, இவர்கள் இருவருக்கும் இருவருக்கும் மாதவிடாயும் ஏற்படுவதில்லை. இருவருக்கும் தனித்தனி கைகள் இருக்கிறது. ஆனால் கால்கள் இருவருக்கு சேர்த்து இரண்டு தான் இருந்தது. கார்மென் வலது காலையும் மற்றும் லுபிட்டி இடது காலையும் கட்டுப்படுத்துகிறார்கள். ஆரம்பத்தில் இது சவாலாக இருந்தாலும், இப்போது அவர்கள் பழகி விட்டதாக கூறுகிறார்கள்.

Chaarulatha என்ற திரைப்படத்தில் பிரியாமணி ஒட்டிப் பிறந்த இரட்டையர்களாக இருப்பர். அப்பொழுது சிறு வயதில் இருவரையும் பிரிக்க முயற்சி செய்வர். ஆனால் அதில் பிரிக்க முடியாது, அதேபோல் இந்த இரட்டையர்களையும் பிரிப்பது சாத்தியமில்லை. முக்கிய உறுப்புகள் இணைந்திருப்பதால், பிரிக்க முயன்றால் ஒருவரோ அல்லது இருவருமே உயிரிழக்க நேரிடும். அவர்கள் 5 வயதிலிருந்தே, ஒரே நிழல் போல இருப்பவர் தான் அவர்களுக்காக உடைகள் தைத்து தருகிறார்.

இந்த இரட்டையர்களில் லுபிட்டி ஒரு Asexual (பாலின ஈர்ப்பு இல்லாதவர்), ஆனால் கார்மென் அப்படி இல்லை.

திருமணம்

2020-ஆம் ஆண்டு, ஒரு டேட்டிங் ஆப் மூலம் டேனியல் என்பவரை காதலிக்கத் தொடங்கினார் கார்மென். இதுகுறித்து அவர் கூறும்போது, “எங்கள் காதல் வெற்றி பெறுமா என்ற கேள்விகள் எனக்குள் இருந்தது. அதனால் சிலமுறை நிச்சயதார்த்தத்தை நிறுத்தியிருக்கிறேன். அதுமட்டுமல்லாமல் லுபிட்டி பற்றியும் சிந்திக்க வேண்டியது இருக்கிறது. எனக்கும் காதலன் டேனியலுக்கும் குழந்தைகள் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் என்னால் குழத்தை பெற்றுகொள்ள இயலாது. அதுமட்டுமல்ல, எங்களுக்குள் (லுபிட்டி) இருவருக்கும் மாதவிடாய் ஏற்படுவதில்லை,” என்றார்.

இதுகுறித்து பேசிய லுபிட்டி, “நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது. கார்மென் கோபமாகவோ அல்லது வருத்தமாகவோ இருக்கிறார் என்றால், நானும் அதே உணர்வை உடனே பெறுவேன்,” என தெரிவித்தார். இந்த நிலையில் தான் டேனியல் மற்றும் கார்மென் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டனர். இந்த புகைப்படம் சமுக வலைத்தளங்களில் வைரலானது.

Related Posts