தொழில்நுட்பம்

சென்னையில் புதிய EV சார்ஜிங் சென்டர்: எங்கு தெரியுமா?

சென்னையில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையம் அமைக்க 9 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு எண்ணெய் இறக்குமதிக்காக 162 பில்லியன் டாலர்கள் செலவு செய்துள்ளது இந்தியா. இதில் பெரும்பாலும் போக்குவரத்துத் துறைக்காக (டீசல் மற்றும் பெட்ரோல்) பயன்படுத்தபட்டுள்ளது. அதில் சராசரியாக 70% டீசலுக்கும், 99.6% பெட்ரோலுக்கும் உபயோகிக்கப்படுகிறது.

இதற்கு ஒரு தீர்வாக மின் வாகனங்கள் உள்ளன. இதன் மூலம் எண்ணெய் இறக்குமதிக்கு ஆகும் செலவுகளை குறைத்து, நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் மேம்படுத்த முடியும்.

அதிகரிக்கும் EV தேவை:

சமீபத்தில் டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக non-BS6, non-CNG, non-EV வணிக வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கு மின்சார வாகனங்களின் தேவை அதிகரித்துள்ளது. இதே போன்று, தொடர்ந்து உயரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் காரணமாகவும் மக்கள் மின்சார வாகனங்களை அதிகம் விரும்ப ஆரம்பித்துள்ளனர்.

இதனால் தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களும் EV வாகனங்களை நோக்கி செல்கிறன. எனினும், இத்துறையில் முக்கிய சவாலாக இருப்பது சார்ஜிங் நிலையங்களின் பற்றாக்குறை. இந்தியாவில் மின்சார வாகன ஷோரூம்கள் அதிகமாக உள்ளன, ஆனால் சார்ஜிங் நிலையங்கள் போதிய அளவு இல்லை.

இதனை சரிசெய்யும் நோக்கில், சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் இணைந்து சென்னை நகரில் 9 முக்கிய இடங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது. 2 நாளில் டெண்டர் அழைப்பு வெளியிடப்பட்டு, விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்கள்:

1) பெசன்ட் நகர், அஷ்டலட்சுமி கோவில் பார்க்கிங்
2) பெசன்ட் நகர் கடற்கரை பார்க்கிங்
3) அம்பத்தூர், மங்கல் ஏரி பார்க்கிங்
4) தியாகராயர் நகர், மாநகராட்சி மைதானம் பார்க்கிங்
5) தியாகராயர் நகர், சோமசுந்தரம் மைதானம்
6) செம்மொழிப் பூங்கா, ஆயிரம் விளக்கு
7) மெரினா கடற்கரை பார்க்கிங்
8) அண்ணாநகர், போகன் வில்லா பூங்கா
9) மயிலாப்பூர், நகேஸ்வரா ராவ் பூங்கா

Related Posts