பொது

தமிழகத்தில் அதிகரிக்கும் புற்றுநோய்.. மத்திய அரசின் திடுக் தகவல்..

தமிழ்நாட்டில் புதிதாக புற்றுநோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரே ஆண்டில் முதல் முறையாக ஒரு லட்சத்தை தாண்டியுள்ளதாக வெளியான புள்ளிவிவரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்திடம் மாநிலங்களவை திமுக MP கிரிதரன் எழுப்பிய கேள்விக்கு இந்த தரவுகள் கொடுக்கப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டிற்கான சமீபத்திய புள்ளிவிவரங்களின் படி, தமிழகத்தில் புதிதாக புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,00,097ஆக உயர்ந்திருப்பதாக தெரியவந்த்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. 2020-ல் 68,750, 2021-ல் 76,968 ஆகவும்; 2022-ல் 89,265 ஆகவும்; 2023-ல் 92,816 ஆகவும்; 2024-ல் 96,486 ஆகவும் இருந்த நிலையில், 2025-ம் ஆண்டு ஒரு லட்சத்தை எட்டியுள்ளது. இந்த தரவுகள், புற்றுநோய் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதை உறுதிப்படுத்துகிறது. மேலும், 2025ஆம் ஆண்டில் 10,821 இறப்புகள் கருப்பை, மார்பகம் மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்களால் மட்டுமே ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

2025 ஆம் ஆண்டில் புதிதாகப் பதிவு செய்யப்பட்ட நோயாளிகளில், 53,542 பேர் பெண்களாகவும், 46,555 பேர் ஆண்களாகவும் இருக்கின்றனர். அதன்படி, சென்னையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8,505 ஆக இருக்கிறது. காஞ்சிபுரத்தில் 7,295 பேரும், வேலூரில் 6,525 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த தரவுகளின்படி,

ஆரம்பகாலத்திலேயே புற்றுநோயை கண்டறிந்தால், முறையான சிகிச்சை வழங்கமுடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். வலுவான பரிசோதனை திட்டங்கள் மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றங்கள் இல்லாவிட்டால், வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை தொடர்ந்து உயரக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Related Posts