பொது

ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுலுக்கு No சொன்ன BCCI

ஆசிய கோப்பை தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் முக்கிய வீரர்கள் இடம்பெறாததால், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெறவுள்ள T20 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணியை இன்று BCCI அறிவித்தது. செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை இந்த தொடர் நடைபெற உள்ளது. 8 அணிகள் இரு பிரிவுகளாக களம் இறங்குவர். ஒரு பிரிவில் 4 அணிகள்…India இருக்கும் ‘A’ பிரிவில் Pakistan, Oman, United Arab Emirates அகிய அணிகள் உள்ளன.

BCCI

லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தலா ஒரு போட்டியில் மோதும். முடிவில், Top-2 இடங்களில் பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். இந்த தொடர், கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம் – கடந்த ஆண்டு ஆசியக் கோப்பையில் இடம்பெற்ற 15 வீரர்களில், முக்கிய வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா, ஜடேஜா ஆகியோர் T20 வடிவிலிருந்து ஓய்வு பெற்றதால், அவர்களுக்கு பதிலாக யார் தேர்வாகப் போகிறார்கள் என்ற ஆர்வம் அதிகமாக இருந்தது. இந்த தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 15 பேர் கொண்ட அணியில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும், சுப்மன் கில் துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதில், கடந்த ஆண்டு இடம் பிடித்த 15 பேரில் 7 பேர் இந்த முறை இடம்பெறவில்லை. குறிப்பாக, சமீபத்தில் நடந்த ஐபிஎலில் 2 வது அதிக சிக்ஸர்கள் விளாசிய ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதேபோல், தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர், கே.எல். ராகுல், துருவ் ஜுரேல், முகமது சிராஜ் மற்றும் காயம் காரணமாக முகமது ஷமி ஆகியோரும் அணியில் இடம்பெறாதது, ரசிகர்களிடையே கேள்விகளை எழுப்பியுள்ளது.

BCCI

இந்திய அணி வீரர்கள்:
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணைக் கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்ஷித் ராணா, ரிங்கு சிங்.

Related Posts