பொது

ட்ரோன் பைலட்டாக நீங்க ரெடியா?

சுமார் 100 ஆண்டுகளை தாண்டி, இந்தியாவின் தொழில் வளர்ச்சியில் முன்னோடியாக திகழ்ந்து வரும் கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் லிமிடெட் (KICL) நிறுவனத்தின் ட்ரோன்ஸ் மற்றும் ஜியோஸ்பேஸியல் பிரிவுக்கு, DGCA (Directorate General of Civil Aviation) -அங்கீகரிக்கப்பட்ட RPTO (Remote Pilot Training Organization) ட்ரோன் பயிற்சி பாடத்திட்டத்தை தொடங்குவதற்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரம் கிடைத்துள்ளது. திறமையான ட்ரோன் பைலட்களை உருவாக்கும் நோக்கத்துடன், அவர்களுக்கு தேவையான தொழில்நுட்ப பயிற்சியையும், சட்டப்பூர்வமான சான்றிதழையும் வழங்குவதன் மூலம், அவர்களின் கனவுகளை மெய்ப்படுத்த ஒரு வலுவான மேடையை உருவாக்குகிறது கோத்தாரி நிறுவனம்.

மதுரை திருமங்கலத்திலித்தில் உள்ள கோத்தாரி பப்ளிக் பள்ளியில் நடைபெறும் இந்த 7 நாள் பயிற்சி, வகுப்பறை பயிற்சியும் செய்முறை பயிற்சியும் இணைந்ததாக இருக்கும்.

முதல் இரண்டு நாட்கள் வகுப்பறை பயிற்சிக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. மூன்றாம் நாள், பங்கேற்பாளர்கள் விமான சிமுலேட்டர் பயிற்சியில் பங்கேற்பார்கள். இது, ட்ரோன் தொழில்நுட்பத்தின் அடிப்படைகள், அதன் செயல்பாடுகள் மற்றும் விதிமுறைகள், ட்ரோன்கள் எப்படி பாதுகாப்பான முறையில் இயக்குதல் போன்ற பல விளக்கங்கள் அளிக்கப்படவுள்ளன. நான்காம் நாள் முதல் ஏழாம் நாள் வரை, பயிற்சியாளர்கள் வழிகாட்டுதலுடன் பங்கேற்பாளர்கள் ட்ரோன் பறத்தல் மற்றும் தனிப்பட்ட விமான செயல்பாடுகள் குறித்து நேரடியாக கற்றுக்கொள்வார்கள்.

இந்த பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பின், பங்கேற்பாளர்களுக்கு RPTO சான்றிதழ் வழங்கப்படும். இது, சிவில்விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (DGCA) விதிமுறைகளின் கீழ், வணிக நோக்கங்களுக்காக ட்ரோன்களை சட்டபூர்வமாக இயக்க அனுமதிக்கிறது.

நாம் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றும் இந்த முழுமையான ட்ரோன் பயிற்சியின் மொத்த கட்டணம் ₹30,000 மட்டுமே.

மேலும் தனி நபர்களின் திறன்களை மேம்படுத்தவும், அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், இந்த திட்டத்தில் குறைந்த எண்ணிக்கையிலான நபர்களுக்கு மட்டுமே சேர்க்கை வழங்கப்பட உள்ளது.

ட்ரோன் பைலட்டாக வேண்டும் என்ற உங்கள் கனவை நினைவாக்க? இன்றே பயிற்சியில் இணையுங்கள். இதை பற்றி மேலும் தெரித்துகொள்ள info-rpto@kotharis.in அல்லது 9500251271 / 9095290952 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

KICL ட்ரோன்ஸ் மற்றும் ஜியோஸ்பேஸியல் நிறுவனத்தின் இந்த முயற்சி, விவசாயம், கண்காணிப்பு மற்றும் மேப்பிங் போன்ற பல்வேறு துறைகளில் சான்றளிக்கப்பட்ட ட்ரோன் பைலட்டுகளை உருவாக்குவதை லட்சியமாக கொண்டுள்ளது. இது, எதிர்கால தொழில்நுட்பத் துறையில் உறுதியான அடித்தளத்தை உருவாக்கும் ஒரு முக்கியமான பயணமாகும்.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts