பாகுபலி படத்தின் வெற்றிக்குப் பிறகு, நடிகை அனுஷ்காக்கு பெரிய திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதன் பின்னர் வெளியான மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி, பாகமதி ஆகிய படங்களும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைப் பெறவில்லை. இதைத் தவிர, அவரது உடல் எடை குறித்து வந்த விமர்சனங்களும், அவருடைய திரைப்பட வாய்ப்புகள் குறைவதற்குக் காரணமாக அமைந்ததாக அவ்வப்போது செய்திகள் வந்து கொண்டுதான் இருந்தன.

ஆனால் தற்போது, தமிழ் சினிமாவில் மீண்டும் கம்பேக் கொடுக்க தயாராகியுள்ளார் அனுஷ்கா. இயக்குநர் கிரிஷ் ஜெகர்லாமூதி இயக்கத்தில் உருவாகியுள்ள “காதி” திரைப்படத்தில், விக்ரம் பிரபு, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
ஆக்ஷன் மற்றும் திரில்லர் நிறைந்த கதைக்களமாக உருவாகியுள்ள இந்தப் படம், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்குக் காரணம், சமீபத்தில் வெளியான போஸ்டர் மற்றும் டீசர் தான்.

வரும் ஜூலை 11ஆம் தேதி, இந்தியா முழுவதும் வெளியாகும் “காதி” திரைப்படம், நடிகை அனுஷ்காவின் கம்பேக்காக அமையுமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்








