பொது

மனைவிக்கு தங்கசெயின் வாங்க கணவன் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த 22 வயதான பாண் கடைக்காரர் அபிஷேக் யாதவ், தனது மனைவி மீதான அன்பை வெளிப்படுத்த ஒரு தங்கச்செயின் வாங்க அவர் செய்த நெகிழ்ச்சியான சம்பவம், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கான்பூர் ரமாதேவி பகுதியிலுள்ள ஹெச்ஏஎல் காலனி அருகே சிறிய பாண் கடை நடத்தி வருகிறார் அபிஷேக். தன் தினசரி வருமானத்தில் இருந்து ₹10 மற்றும் ₹20 நாணயங்களை நகை வாங்குவதற்காகச் சிறுகச் சிறுகச் சேமித்துள்ளார். இதன்மூலம் அவர் ஒரு லட்ச ரூபாய்க்கும் அதிகமான தொகையை இந்த நாணயங்கள் மூலம் திரட்டியுள்ளார்.

பின்னர் சேமித்த நாணயங்கள் நிறைந்த ஒரு பெரிய பையையுடன், மனைவிக்குத் தங்கச் செயின் வாங்க நகைக்கடைக்குச் சென்றார். அங்கு இவ்வளவு நாணயங்களைப் பார்த்த நகைக்கடை உரிமையாளர் மகேஷ் வர்மா முதலில் அதிர்ச்சி அடைந்தார். அதன்பின்னர், அபிஷேக் யாதவ் தன் மனைவி மீது வைத்த பாசத்துடன், இந்த நாணயங்களைச் சேமித்த கதையைக் கேட்டதும், நகைக்கடை உரிமையாளர் மகேஷ் வர்மா மிகவும் நெகிழ்ச்சியடைந்தார்.

அபிஷேக்கிடம் இருந்த அனைத்து நாணயங்களையும் ஏற்றுக்கொண்ட கடைக்காரர், மீதமுள்ள தொகையை தவணை முறையில் செலுத்துவதற்கும் ஒப்புக்கொண்டார். நகைக்கடைக்காரர் இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இது தற்போது இணையத்தில் வைரலாகியும், பலரும் கருத்துக்களை பகிர்ந்தும் வருகின்றனர்.

Related Posts