பொது

அஜித் படத்திற்க்கு நீதிமன்றம் கொடுத்த Shock!

தொடர்ந்து தனது பாடல்களுக்கு காப்புரிமை நோட்டீஸ் அனுப்பிக் கொண்டிருக்கும் இசையமைப்பாளர் இளையராஜா, சமீபத்தில் அஜித் நடித்த “Good Bad Ugly” படத்திற்கும் நோட்டீஸ் அனுப்பினார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், “இளையராஜாவின் பாடல்களை அனுமதி இன்றி பயன்படுத்தக்கூடாது!” என்று இடைக்கால தடை விதித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் படங்களில் பழைய பாடல்களை மீண்டும் பயன்படுத்தி அவற்றை பிரபலமாக்கும் டிரெண்டு அதிகரித்துள்ளது. இயக்குநர்களும் தங்கள் படத்தின் ஹீரோவின் எண்ட்ரி, மாஸ் ஃபைட் சீன்ஸ் போன்ற முக்கிய காட்சிகளில் பழைய பாடல்களை வைத்து வருகின்றனர். இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறுகிறது. ஆனால் அந்த பாடல்களை இயற்றிய இசையமைப்பாளர்களுக்கு இது தெரிவிக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது.

இளையராஜா, தனது பாடல்களின் முதல் உரிமையாளர் நான் தான் என்று கூறி, NOC வாங்காமல் பலர் தனது பாடல்களை பயன்படுத்துவதாக அவர் பல திரைப்படங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி வருகிறார். இதனால், திரைப்பட ரசிகர்கள் மற்றும் நடிகர்கள் மத்தியில் அவர் மீது பெரும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இளையராஜா இசையமைத்த 1000-க்கும் மேற்பட்ட பாடல்களின் உரிமைகள் பல நிறுவனங்களிடம் இருக்கின்றன. மேலும் பாடல் உரிமைகள் பல நிறுவனங்களிடையே பலமுறை கைமாறியுள்ளன. இதனால், இளையராஜாவின் பாடல்களின் உரிமை குறித்த குழப்பம் இன்னும் நீடித்துள்ளது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு வெளியான “மஞ்சுமேல் பாய்ஸ்”, இந்த ஆண்டு வெளியான “குட் பேட் அக்லி”, “கூலி” ஆகிய படங்களுக்கு அவர் நோட்டீஸ் கொடுத்துள்ளார். இதில், அஜித் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் இளையராஜாவின் “இளமை இதோ இதோ”, “ஒத்த ரூபாயும் தாரேன்”, “என் ஜோடி மஞ்சக் குருவி” ஆகிய பாடல்கள் அனுமதி இன்றி பயன்படுத்தப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இன்று (0) அந்த படத்தில் உள்ள பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

வனிதா நடித்த “மிஸ்டர் அண்ட் மிஸ்” திரைப்படத்திற்கும் இவர் காப்புரிமை வழக்கு கொடுத்தபோது, அவர் அழுது பேட்டியளித்தது அனைத்து செய்திகளிலும் வெளியாகியது. இதனால் இசைஞானி இளையராஜாவை பலர் விமர்சித்து வருகின்றனர்.

Related Posts