நடிகை நிவேதா பெத்துராஜ், ‘ஒரு நாள் கூத்து’, ‘பொதுவாக என் மனசு தங்கம்’, ‘டிக் டிக் டிக்’ போன்ற படங்களில் நடித்துப் பிரபலமானவர். இவர் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற தெரு நாய்களுக்கான ஆதரவுப் பேரணியில் கலந்துகொண்டார். நவம்பர் 23 அன்று நடந்த இந்தப் பேரணியில் அவர் பேசிய கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

“நாய் கடித்தால் அதை ஊதிப் பெரிய விஷயமாக ஆக்கி, மக்களிடையே பயத்தை உருவாக்குகிறோம். இதை நாம் செய்யக்கூடாது.” ரேபிஸ் ஆபத்தானது என்றாலும், பயத்தை உருவாக்குவதை விடுத்து, அதற்கான சரியான தீர்வை மக்களுக்குச் சொல்ல வேண்டும். “தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடுவதுதான் சரியான தீர்வு.” “நாய்களைக் காப்பகங்களில் அடைப்பது அல்லது அகற்றுவது சரியான தீர்வாகாது.” மாறாக, “நாய்களைப் பிடித்து தடுப்பூசி செலுத்தி மீண்டும் அதே இடத்தில் விட்டாலே போதுமானது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல.” விலங்குகளுக்கு எதிரான சம்பவங்கள் நடக்கும்போது அதைக் கேட்க யாரும் இல்லை என்று அவர் வேதனையுடன் தெரிவித்தார். நடிகை நிவேதா பெத்துராஜின் இந்தக் கருத்துக்களுக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவும், விமர்சனங்களும் குவிந்து வருகின்றன. ஒருபுறம், விலங்குகளின் உரிமைகளுக்காகப் பேசிய அவருக்குப் பாராட்டுகள் குவிகின்றன. மறுபுறம், தெரு நாய்களால் பொதுமக்கள் சந்திக்கும் அச்சுறுத்தல் குறித்து விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.








