பொது

“ரூ.21.59 கோடி வழங்க வேண்டும்” விஷாலுக்கு ஹைகோர்ட் உத்தரவு

நடிகர் விஷால், லைகா நிறுவனத்திடம் பெற்ற ரூ.21.59 கோடி பணத்தை 30% வட்டியுடன் திரும்பச் செலுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஷால், விஷால் ஃபிலிம் ஃபேக்டரி என்ற பெயரில் படத்தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் தனது படத் தயாரிப்புக்காக சினிமா ஃபைனன்சியர் அன்பு செழியனின் கோபுரம் ஃபிலிம்ஸ் நிறுவனத்திடம் ரூ.21.29 கோடி பணத்தை கடனாக பெற்றுள்ளார். இந்த தொகையை அவரால் செலுத்த முடியாததால் அவருக்காக லைகா திரைப்பட தயாரிப்பு நிறுவனம் இந்த தொகையை செலுத்தியது. இந்த தொகையை விஷால் லைகா நிறுவனத்திற்கு திருப்பி செலுத்தும்வரை விஷால் ஃபிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்கள் அனைத்தையும் லைகா நிறுவனத்திற்கு வழங்கப்பட வேண்டும் என ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த் ஒப்பந்தந்தத்தை மீறி விஷால் படங்களை வெளியிட்டதால், நடிகர் விஷாலை எதிர்த்து லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று நீதிபதி பி.டி.ஆஷாம் முன்னிலையில் நடைபெற்றது. நீதிபதி ஆஷாம், “லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய ரூ.21.29 கோடி 30% வட்டியுடனும், வழக்குச் செலவு தொகையையும் லைகா நிறுவனத்துக்கு விஷால் தரப்பு வழங்க வேண்டும்” என உத்தரவிட்டார்.

முன்னதாக இதே வழக்கில் நடிகர் விஷாலுக்கு உயர்நீதிமன்றம் ரூ.15 கோடி பணத்தை வங்கியில் டெப்பாசிட் செய்ய உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Posts