நடிகர் சூரி, தனது குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய வீடியோவை ‘X’ தளத்தில் வெளியிட்டிருந்தார். அவர் வெளியிட்டிருந்த பதிவின் கீழ் வந்த ஒரு கமெண்ட்டில், ஒருவர் கிண்டலாக, “திண்ணையில் கிடந்தவனுக்கு திட்டக்குடிக்குன்னு வந்துடுச்சாம் வாழ்க்கை” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்தக் கிண்டலான கமெண்ட்டைப் பார்த்த நடிகர் சூரி, கோபப்படாமல் நெகிழ்ச்சியாக பதிலளித்தார், “நான் திண்ணையில் கூட இல்லை நண்பா… பல நாட்கள் இரவும் பகலும் ரோட்டில்தான் இருந்தேன். அந்த கஷ்டமான நாட்களும், பாதைகளும்தான் எனக்கு வாழ்க்கையின் உண்மையான மதிப்பைக் கற்றுத் தந்தன. நீங்களும் உங்கள் மீது நம்பிக்கை வைத்து முயற்சி செய்தால், உங்களுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும்.” என்று கூறினார்.








