வணிகம்

கத்தாரில் கால் பதிக்கும் கோத்தாரி நிறுவனம்

சென்னையை சேர்ந்த கோத்தாரி இண்டஸ்ட்ரில் கார்ப்பரேஷன் நிறுவனம் மார்ச் 26 ஆம் தேதி மத்திய கிழக்கு நாடான கத்தாரின் தோஹா நகரில் தனது புதிய kickers ஷோரூமை தொடங்கியுள்ளது. 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட காலணி மற்றும் ஆடை தயாரிக்கும் பிரெஞ்சு நிறுவனமான kickersன் ஷூக்களை இந்தியா உள்ளிட்ட 9 நாடுகளில் உற்பத்தி விற்பனை செய்ய ஏற்கனவே கோத்தாரி நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

தோஹா நகரில் உள்ள முக்கிய மாலில் இந்த கடையை திறந்ததன் மூலம் உலக மார்கெட்டில் தனது முதல் கால்தடத்தை பதித்துள்ளது கோத்தாரி நிறுவனம். kickers fashion நிறுவனத்துடன் இணைந்து கோத்தாரி நிறுவனம் சென்னையில் உள்ள VR மாலில் தனது முதல் கடையை நிறுவியது. இதன் மூலம் நூற்றாண்டு பாரம்பரியமும் பெருமையும் மிக்க கோத்தாரி நிறுவனம் தனது பெருமையை மறுபடியும் மீட்டெடுத்து வருகிறது. இந்தியா முழுவதும் 100க்கும் மேற்பட்ட kickers ஷோரூம்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக இந்நிறுவனத்தின் தலைவர் ரபீக் அகமது தெரிவித்துள்ளார். சென்ற ஆண்டு தொடக்கத்தில் தேசிய பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டதிலிருந்து, கோத்தாரி நிறுவன பங்குகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.1500 கோடியை நெருங்கி வருகிறது. 

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts