தொழில்நுட்பம்

கூகுளை மிஞ்சும் இந்தியாவின் AI

தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருக்கும் நிலையில், நமக்கு எந்த தகவல் தேவையானாலும் உடனே கூகுளைத் தேடிச் செல்வோம்.
ஆனால் இப்போது, ஒரு இந்தியர் உலகின் மிகப்பெரிய search இன்ஜின் நிறுவனமான கூகுளுக்கு நேரடியாக சவால் விடுக்கும் அளவிற்கு ஒரு புதிய நிறுவனத்தை துவக்கியுள்ளார்.

இந்தியாவைச் சேர்ந்த அர்விந்த் ஸ்ரீநிவாஸின் பெயர் இன்று உலகம் முழுவதும் பேசப்படுகிறது. அவருடைய கனவு மட்டும் அல்ல, அவரது நம்பிக்கையும், நாட்டின் பெருமையும் ஒன்று சேர்ந்து உருவாகியுள்ளது “Perplexity ” எனும் AI நிறுவனம்.
இந்த நிறுவனம் உருவாக்கியிருக்கும் புதிய பிரவுசர் “காமட்”, சாதாரண தேடுதளமாக மட்டும் இல்லை. இது, உங்கள் முன்பைய தேடுதல்களைப் புரிந்துகொண்டு, ஆழமான அனலைசிஸ் மூலம் தீர்வுகளை வழங்கக்கூடியதாகும். ஒரு மனித உடலைப் போல செயல்படும் இயந்திரம்.

இப்போது வரை நமக்கு கூகுளில் கிடைக்கும் பதில்களே இறுதியாக இருந்தது. ஆனால் இந்த புதுமையான முயற்சி, கூகுளின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வரக்கூடியதாக இருக்கலாம். ஏனென்றால், இது வெறும் தொழில்நுட்பம் அல்ல; இந்தியாவின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் முயற்சி.
இந்த நிறுவனத்தின் மீது NVIDIA, SoftBank, Amazon நிறுவனர் ஜெஃப் பெசோஸ், OpenAI, மற்றும் Meta-வின் யான் லிகுன் போன்ற உலகின் முன்னணி நிபுணர்கள் முதலீடு செய்துள்ளனர். பெர்பிளக்சிட்டி நிறுவனம் ₹4,400 கோடி நிதி திரட்டியதைத் தொடர்ந்து, அதன் ஸ்டார்ட்அப் மதிப்பு விரைவில் ₹1.2 லட்சம் கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts