வணிகம்

கடைசி சில மணிநேரம்! உடனே ITR தாக்கல் செய்யுங்க

2026–2027 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி (ITR) தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் இன்றுடன் நிறைவடைகிறது.

ஒவ்வொரு ஆண்டும் நிதியாண்டு முடிந்ததும் அனைவரும் வருமான வரி தாக்கல் வேண்டியது அவசியம். அந்த வகையில், 2026–2027 ஆம் ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கு இன்று (ஜூலை 31) கடைசி நாளாகும்.

இந்த நிலையில், மாத ஊதியம் பெறும் தனிநபர்கள், ஓய்வூதியம் பெறுவோர், முதலீட்டாளர்கள் உள்ளிட்டோர் தங்களின் வருமான வரி இன்று இரவு 12 மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். ஒருவேளை இன்றைக்குள் வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றால், வருமானத்திற்கு ஏற்ப அபராதம் விதிக்கப்படும்.

உதாரணமாக, உங்கள் வருமானம் ரூ.5 லட்சத்திற்குள் இருந்தால் ரூ.1,000 அபராதமும், ரூ.5 லட்சத்திற்கு மேல் இருந்தால் ரூ.5,000 அபராதமும் செலுத்த வேண்டும். இதுமட்டுமல்லாமல், TDS ரீஃபண்ட் பெறுவதில் தாமதம், வரிச் சலுகைகளை பெறுவதில் சிக்கல், பங்குச் சந்தை முதலீட்டில் ஏற்பட்ட இழப்புகளை அடுத்த ஆண்டுகளுக்கு Carry Forward செய்யும் சலுகையையும் இழக்கும் வாய்ப்பு உள்ளது.

வருமான வரித்துறை தனது X தளத்தில் வெளியிட்டுள்ள தகவலின்படி, இதுவரை 5 கோடியே 50 லட்சம் பேர் 2026–27 ஆம் ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்துள்ளனர். இதில் நேற்று ஒரு நாளில் மட்டும் 42 லட்சம் பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர்.

இதைத் தவிர, வணிகம் அல்லது தொழில் வருமானம் ஈட்டும் நபர்கள் மற்றும் தணிக்கை (Audit) தேவையில்லாத வரி செலுத்துவோருக்கு, வருமான வரி தாக்கல் செய்ய ஆகஸ்ட் 31 கடைசி நாளாகும்.

Related Posts