வணிகம்

24 ஆண்டுகள் கடந்து… இந்தியா Vs ஜிம்பாப்வே

டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகளும் கடைசியாக இந்தியாவில் 24 ஆண்டுகளுக்கு முன்னாடிதான் நேருக்கு நேர் மோதியது என்று சொன்னா நம்ப முடியுமா?… ஆம்.

மார்ச் 19, 2002 — கடைசியாக இந்திய மண்ணில் குவஹாத்தி மைதானத்தில் ஜிம்பாப்வே அணி இந்தியாவை எதிர்த்து விளையாடியது. அன்று இளம் வீரர்களாக இருந்த Sourav Ganguly, Rahul Dravid, Yuvraj Singh போன்ற வீரர்கள் இன்று ஓய்வு பெற்றுவிட்டனர். அன்னைக்கி கிரிக்கெட் பார்த்த குழந்தைகள் இன்று பெற்றோராகிவிட்டார்கள். அந்த தினத்திற்கு பிறகு 8,766 நாட்கள் கடந்தும் இந்திய மண்ணில் ஜிம்பாப்வே அணி இந்தியாவை எதிர்கொள்ள வாய்ப்பு வரவில்லை.

ஒரு காலத்தில் உலக கிரிக்கெட்டை நடுங்க வைத்த அணி ஜிம்பாப்வே. 1983 50 ஓவர் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய அணி, 1999 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவை நிலைகுலையச் செய்த அணி. Heath Streak, Andy Flower, Neil Johnson என பல்வேறு சிறந்த கிரிக்கெட்டர்கள் இருந்த அணி, அதற்கு பிறகு அரசியல் சிக்கல்கள், பொருளாதார நெருக்கடி, வீரர் வெளியேற்றம் என அனைத்தையும் தாங்கிக்கொண்டு இன்றும் மைதானத்தில் நிற்கிறது.

இரு அணிகளுக்கும் அரையிறுதிக்கு முன்னேற இந்த போட்டி மிகவும் முக்கியம். இந்தியாவுக்கு தனது சிறந்த மைதானமான சேப்பாக்கம், 40,000 இருக்கைகளை கொண்ட ரசிகர்கள் சாதகமாக இருந்தாலும், ஜிம்பாப்வே அணியும் தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதனால் இன்று சேப்பாக்கத்தில் நடைபெறப்போகும் இந்த ஆட்டம் யாருக்கு சாதகமாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்…

Related Posts