ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான Flipkart, தற்போது ஆன்லைன் Food Delivery சந்தையிலும் கால்பதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Swiggy, Zomato போன்ற நிறுவனங்கள் முன்னிலையில் உள்ள நிலையில், Flipkart 2024-ஆம் ஆண்டு தனது 10 நிமிட மளிகைப் பொருள் டெலிவரி சேவையை தொடங்கியது.
தற்போது, புதிய முயற்சியாக வரும் மே-ஜூன் மாதங்களில் பெங்களூரின் முக்கிய பகுதிகளில் Food Delivery சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளதாக அறிக்கை வெளியுட்டு இருக்கு Flipkart நிறுவனம்.
ஆன்லைன் ஷாப்பிங் துறையில் தனக்கென ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ள Flipkart, Food Delivery சந்தையில் நுழைவதன் மூலம் Swiggy, Zomato போன்ற நிறுவனங்களுக்கு கடும் போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுது.
2022-ஆம் ஆண்டு Open Network for Digital Commerce (ONDC) என்ற திட்டத்தின் மூலம் அனைத்து டிஜிட்டல் ஷாப்பிங் தளங்களையும் ஒன்றிணைக்க Flipkart முயற்சி செய்தது. ஆனால், பல நிறுவனங்கள் இதற்கு சம்மதிக்காததால், அது பாதியில் நிறுத்தப்பட்டது.
Food Delivery ஆப்களின் தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த துறையில் நுழைய Flipkart தனி குழுவை அமைத்து திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆன்லைன் ஷாப்பிங் துறையில் பல சவால்கள் இருந்தாலும், முக்கிய செலவுகளை குறைத்ததன் மூலம் FY25 நிதியாண்டில் Flipkart தனது இழப்புகளை குறைக்க முடிந்தது. மேலும், FY25-ல் அதன் வருவாய் 14% அதிகரித்து ரூ.20,493 கோடியாக உயர்ந்துள்ளது.









